Gold Rate Today: இன்று மார்க்கெட் திறந்ததும் சட்டென சரிந்த தங்கம் விலை.. சென்னையில் என்ன ரேட்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாறுமாறாக உயர்ந்து கொண்டே வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி விற்பனையானது. இன்று மார்க்கெட் திறந்த நிலையில் சவரனுக்கு ரூபாய் 520 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 71,520க்கு விற்பனை ஆகிறது.

தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. தினசரி தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று தங்கம் விலை சட்டென சரிந்துள்ளது.

Gold price Gold

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, அவ்வப்போது தங்கம் விலை மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது, நாடுகளுக்கு இடையே நிலவி வரும் போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தகப் போர் முடிவுக்கு வராத பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், விரைவில் ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்தை தாண்டும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து உயர்வு காணும் தங்கம் விலை

இந்த ஆண்டின் தொடக்கம் முதலே வெகுவாக அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம். 2025 ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ. 57,200 ஆக இருந்தது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக உயர்வைக் கண்டு வருகிறது தங்கம் விலை. கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி தங்கம் விலை ஒரு சவரன் ரூ 68,080-க்கு விற்பனை ஆனது. தொடர்ந்து அதன் பிறகு அதிரடியாக தங்கம் விலை புதிய உச்சங்களை எட்டி வருகிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ 2,200 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் விலை ரூ 74,320-க்கு விற்பனை ஆனது.

வரலாறு காணாத உச்சம்

அதிரடியாக உயர்ந்தது போல அடுத்த நாளே (ஏப்ரல் 23) தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. அதாவது சவரனுக்கு ரூ.2,200 குறைந்து சவரன் ரூ.72,120க்கு விற்பனையானது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ரூ.275 குறைந்து ரூ.9,015க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் விலை ஏப்ரல் 24 அன்று 2-வது நாளாக சரிவை சந்தித்தது. அதன்படி, சவரனுக்கு ரூ.80 குறைந்து 72,040க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.10 குறைந்து 9,005க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் தங்கம் விலையில் இன்று மாற்றம் ஏதும் இல்லை. ஏப்ரல் 25, 26 ஆகிய நாட்களிலும் தங்கம் விலையில் மாற்றமில்லை.

தங்கம் விலையில் மாற்றம் இல்லை

ஞாயிற்றுக்கிழமையான நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ. 72,040க்கு விற்பனை செய்யப்பட்ட. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ. 9,005க்கு விற்பனை ஆகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை இன்று கூடுமா? குறையுமா? மாற்றம் ஏதுமின்றி விற்பனையாகுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 520 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து உள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் 71,520க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8,940க்கு விற்பனையாகிறது.

கடந்த ஏப்ரல் 1 முதல் தங்கம் விலை நிலவரம்

27.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
26.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
25.04.2025 - ஒரு சவரன் ரூ.72,040
24.04.2025- ஒரு சவரன் ரூ.72,040
23.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
22.04.2025- ஒரு சவரன் ரூ.74,320
21.04.2025- ஒரு சவரன் ரூ.72,120
20.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
19.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
18.04.2025- ஒரு சவரன் ரூ.71,560
17.04.2025- ஒரு சவரன் ரூ.71,360
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300 (காலை)
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+