Gold Rate Today: மார்க்கெட் திறந்ததும் முதல் நாளே அதிர்ச்சி! சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 10) சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, சவரன் ரூ 64,400-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8050-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது. இரு நாட்களில் சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.

அது போல் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் 4ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ 8ஆயிரத்தை தாண்டி ரூ 8,010-க்கு விற்பனையானது.

அது போல் மார்ச் 5ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மார்ச் 10ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 64,400-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,050-க்கு விற்பனையாகிறது.

கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320 (மார்க்கெட் விடுமுறை)
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,480 (மாலை கூடிய விலை)
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,160 (காலை குறைந்த விலை)
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680

Gold Rate Today (தங்கம் விலை இன்று) [10th March 2025]: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 10) சவரனுக்கு ரூ 80 உயர்ந்து, சவரன் ரூ 64,400-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8050-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+