Gold Rate Today: பேரிடி! தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை நெருங்கியது! இன்று ஒரே நாளில் 1480 உயர்வு
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 8) சவரனுக்கு ரூ 1480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 69,960-க்கு விற்பனையாகிறது. கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 3960 உயர்ந்து புதிய உச்சம் பெற்ற நிலையில் இன்று சவரன் ரூ 70 ஆயிரத்தை தொட்டது. இன்னும் 40 ரூபாய் உயர்ந்தால் தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை எட்டும்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
ஏப்ரல் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ 68,080-க்கும் ஏப்ரல் 2ஆம் தேதி மாற்றமில்லாமல் அதே விலையிலும் நேற்றைய தினம் ரூ 68,480-க்கும் அதாவது சவரனுக்கு 400 உயர்ந்து விற்பனையானது.
ஏப்ரல் 9-ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1480 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 69,960-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 185 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,745-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 தினங்களாக தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டுவிட்டது. தற்போது சவரன் ரூ 70 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1480க்கு உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080












Click it and Unblock the Notifications