Gold Rate Today: அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய்தாலும்! சென்னையில் தங்கம் விலை குறையாது போலயே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 12) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 81,920-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 10,245-க்கு விற்கப்படுகிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் ஒரு குண்டு மணி தங்கத்தை கூட வாங்க முடியாமல் தவித்து வருகிறார்கள். வெள்ளி விலை கிராமுக்கு ரூ 2 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 142க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.

செப்டம்பர் 12 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ 10,240-க்கும், சவரனுக்கு ரூ. 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 81,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் என்ன நடந்தாலும் தங்கம் விலை மட்டும் குறையாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+