Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் இரு முறை உயர்வு! சென்னையில் நகைப் பிரியர்கள் அதிர்ச்சி
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 13) சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 70,840-க்கு விற்பனையாகிறது. இன்று காலை சவரனுக்கு 120 உயர்ந்த நிலையில் மாலையில் ரூ 720 என சவரனுக்கு ரூ 840 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
மே10 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 120 உயர்ந்தது. இதனால் ஒரு சவரன் ரூ 70,120 க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் ரூ 70,840-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ 8,855-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று இரு முறை உயர்ந்துள்ளது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,840 (மாலை)
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,120 (காலை)
12.05.2025- ஒரு சவரன் ரூ.70,000
11.05.2025- ஒரு சவரன் ரூ.72,360 (ஞாயிறு)
10.05.2025- ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025- ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025- ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,800 (மாலை)
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,200 (காலை)
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200












Click it and Unblock the Notifications