Gold Rate Today: அமெரிக்காவில் பணவீக்கம்! தங்கம் விலை முழம் ஏறிட்டு ஜான் சறுக்குதே! நியாயமா?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 13) சவரனுக்கு ரூ 160 குறைந்து ஒரு சவரன் ரூ 81,760-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 10,220-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ 1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 143-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,43,000 ஆகும்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.
செப்டம்பர் 13 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 20 குறைந்து ஒரு கிராம் ரூ 10,220-க்கும், சவரனுக்கு ரூ. 160 குறைந்து ஒரு சவரன் ரூ 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் தங்கம் விலையில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்காவில் என்ன நடந்தாலும் தங்கம் விலை மட்டும் குறையாது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640












Click it and Unblock the Notifications