Gold Rate: தமிழ் புத்தாண்டு தினத்தில் ஷாக்.. கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: தமிழ் புத்தாண்டு தினமான இன்று தமிழகத்தில் (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு ரூ. 160 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிலோ ரூ. 5 ஆயிரம் உயர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களாக இறங்கி வந்த தங்கம் விலை இன்று ஒரே அடியாக சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. 1 லட்சத்திற்கு மேல் சென்ற தங்கம் விலையால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகியுள்ளது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 23 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,01,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 1-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.1,26,200- க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும், ஈரானின் கண்டிஷன்கள் நல்ல தொடக்கம் எனவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாக சரிந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை 15% வரை சரிந்தது. 100 டாலருக்கு கீழ் போனது. இதனால் டாலர் மதிப்பு சரிந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரேயடியாக உயர்ந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 2%க்கு மேல் அதிகரித்து, 4800 டாலரை தொட்டது. இந்தியாவிலும் அதுவே எதிரொலித்துள்ளது.
அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தங்கம் விலை, சவரனுக்கு ரூ. 200 குறைந்து ஒரு சவரன் ரூ 1,12,800-க்கும், கிராமுக்கு ரூ. 25 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,110-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,65,000-க்கும் விற்பனையானது.
ஏப்ரல் 13 ஆம் தேி ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, தங்கம் விலை கிராமிற்கு ரூ. 14,060க்கும் 1 சவரன் ரூ. 1,12,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்து 1 கிராம் ரூ. 265 க்கும், 1 கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 14) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,220க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து, 1 சவரன் 1,13,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760
13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480
12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800
11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800
10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications