Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate: மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. நகைப் பிரியர்களுக்கு ஷாக்.. ஒரு கிராம் எவ்வளவு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் (ஏப்ரல் 15) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து மிடில் கிளாஸ் மக்களிடையே ஷாக் கொடுத்துள்ளது. வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் தங்கம், வெள்ளி விலையால் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் போக்கு காட்டி வருகிறது. 1 லட்சத்திற்கு மேல் சென்ற தங்கம் விலையால் மிடில் கிளாஸ் மக்களுக்கு தங்கம் எட்டாக் கனியாகியுள்ளது. சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

Gold Gold price

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 23 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,01,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 1-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.1,26,200- க்கு விற்பனையானது. தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

மேலும், ஈரானின் கண்டிஷன்கள் நல்ல தொடக்கம் எனவும் குறிப்பிட்டார். போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை 15% வரை சரிந்தது. 100 டாலருக்கு கீழ் போனது. இதனால் டாலர் மதிப்பு சரிந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரேயடியாக உயர்ந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 2%க்கு மேல் அதிகரித்து, 4800 டாலரை தொட்டது. இந்தியாவிலும் அதுவே எதிரொலித்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் ஏப்ரல் 13 ஆம் தேி ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 320 குறைந்து, தங்கம் விலை கிராமிற்கு ரூ. 14,060க்கும் 1 சவரன் ரூ. 1,12,480க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல, வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 குறைந்து 1 கிராம் ரூ. 265 க்கும், 1 கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் குறைந்து ரூ. 2,60,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் 14 ஆம் தேதியான நேற்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ரூ. 160 உயர்ந்து ரூ. 14,220க்கு விற்பனை செய்யப்பட்டது. சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்து, 1 சவரன் 1,13,760க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 5 உயர்ந்து ரூ. 265க்கும், கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் உயர்ந்து ரூ. 2,65,000க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் இன்று (ஏப்ரல் 15) ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் ரூ. 100 உயர்ந்து ரூ. 14,320க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து, 1 சவரன் 1,14,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 275க்கும், கிலோவுக்கு ரூ. 10 ஆயிரம் உயர்ந்து ரூ. 2,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

15.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,14,560

14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760

13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480

12.04.2026 - ஒரு சவரன் ரூ. 1,12,800

11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800

10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000

09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600

07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)

05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+