Gold Rate: தங்கம் விலை கிடுகிடு! அட்சய திருதியைக்கு நகை கடை பக்கம் கூட போக முடியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,14,880-க்கும், கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,3600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,75,000-க்கும் விற்பனையாகிறது.

Gold Rate
Photo Credit:

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 23 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,01,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 1-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. ரூ.1,26,200- க்கு விற்பனையானது.

தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இந்த சரிவு முடிவுக்கு வந்துவிட்டதாகவே தெரிகிறது. அதாவது ஈரான் மீதான தாக்குதலை இரு வாரங்கள் நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ஈரானின் கண்டிஷன்கள் நல்ல தொடக்கம் எனவும் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை ஆரம்பிக்கவுள்ள சூழலில், கச்சா எண்ணெய் விலை தடாலடியாகச் சரிந்தது.

போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை 15% வரை சரிந்தது. 100 டாலருக்கு கீழ் போனது. இதனால் டாலர் மதிப்பு சரிந்த நிலையில், சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரேயடியாக உயர்ந்தது. போர் நிறுத்த அறிவிப்பு வந்தவுடனேயே சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை 2%க்கு மேல் அதிகரித்து, 4800 டாலரை தொட்டது. இந்தியாவிலும் அதுவே எதிரொலித்துள்ளது.

அந்த வகையில் சென்னையில் ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,14,880-க்கும், கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,3600-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 275-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,75,000-க்கும் விற்பனையாகிறது

ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

16.04.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880

15.04.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560

14.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,760

13.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,480

12.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800

11.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,800

10.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000

09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000

08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600

07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)

05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+