Gold Rate Today: ரஷ்யாவில் எதிரொலித்த 'ஜோலதோ' முழக்கம்! சென்னையில் தங்கம் விலையை கேட்டால் தலை சுத்துதே!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 16) தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 95,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அது போல் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ 11,900-க்கு விற்பனையாகிறது. ஜோலதோ என்றால் ரஷ்ய மொழியில் தங்கம் என்ற பொருள்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன.

இதை முன் வைத்து ரஷ்யாவில், டாலருக்கு பதிலாக ஜோலதோ என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளனர். இதனால் விரைவில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ 1 லட்சத்தை எட்டும் என்கிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.
அக்டோபர் 16 ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 உயர்ந்து ஒரு சவரன் ரூ 95,200-க்கும் கிராமுக்கு ரூ 40 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,900-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதுபோல் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ 207-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,07,000-க்கும் விற்பனையானது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது. எனவே தீபாவளிக்கு சவரன் 90 முதல் 95 ஆயிரத்தை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications