Gold Rate Today: தங்கம் விலை இன்று நிம்மதி பெருமூச்சு! ஒரு கிராம் குண்டுமணி எவ்வளவு?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 19) மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 96,000-க்கு விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலையும் ஒரு கிராம் ரூ 190 க்கு விற்பனையாகிறது. தீபாவளி பண்டிகைக்கு தங்கம் விலை 1 லட்சத்திற்கு விற்பனையாகும் என சொல்லப்பட்ட நிலையில் நேற்று காலை சவரனுக்கு ரூ 2000 விலை குறைந்து, மீண்டும் மாலை ரூ 400 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன.

இதை முன் வைத்து ரஷ்யாவில், டாலருக்கு பதிலாக ஜோலதோ என்ற முழக்கத்தை முன் வைத்துள்ளனர். இதனால் விரைவில் தங்கம் விலை ஒரு சவரன் ரூ 1 லட்சத்தை எட்டும் என்கிறார்கள்.
கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.77,640-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 86,880- க்கு விற்பனையானது. கடந்த அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 77 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 86 ஆயிரத்தை தாண்டியது.
அக்டோபர் 19-ஆம் தேதியான இன்று தங்கம் விலை ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 96,000-க்கும் கிராமுக்கு ரூ. 250 குறைந்து ஒரு கிராம் ரூ 12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ 190-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,90,000-க்கும் விற்பனையாகிறது.
அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த சில தினங்களாக ஒரே நாளில் தங்கம் விலை இரு முறை உயர்வதும் ஒரு முறை உயர்வது, ஒரு முறை குறைவது என நிகழ்ந்து வருகிறது.
அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
19.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000
18.10.2025 - ஒரு சவரன் ரூ.96,000 (மாலை)
18.10.2025 - ஒரு சவரன் ரூ.95,600 (காலை)
17.10.2025- ஒரு சவரன் ரூ.97,600
16.10.2025 - ஒரு சவரன் ரூ.95,200
15.10.2025 - ஒரு சவரன் ரூ.94,880
14.10.2025 - ஒரு சவரன் ரூ.94,600
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,640 (மாலை)
13.10.2025 - ஒரு சவரன் ரூ.92,200 (காலை)
12.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000
11.10.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (மாலை)
11.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (காலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,720 (மாலை)
10.10.2025 - ஒரு சவரன் ரூ.90,080 (காலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,400 (மாலை)
09.10.2025 - ஒரு சவரன் ரூ.91,200 (காலை)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.91,080 (பிற்பகல்)
08.10.2025 - ஒரு சவரன் ரூ.90,400 (காலை)
07.10.2025 - ஒரு சவரன் ரூ.89,600
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (மாலை)
06.10.2025 - ஒரு சவரன் ரூ.89,000 (காலை)
05.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600
03.10.2025- ஒரு சவரன் ரூ 86,720
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025- ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025- ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications