Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: 1 கிராம் 12 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! மூக்குத்திக் கூட போட முடியாதா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 26) சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 94,400 -க்கும், கிராமுக்கு ரூ 80 குறைந்து ஒரு கிராம் ரூ 11,800-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 176-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,76,000-க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

Gold Rate Gold Price

கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 3 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.ரூ 86,720-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 26-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 92,000- க்கு விற்பனையானது.

நவம்பர் 26-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 94,400 -க்கும், கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ 11,800-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 176-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 1,76,000-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராமை விட குறைவான மூக்குத்தி கூட வாங்க முடியாத நிலை உள்ளது. அரை கிராமில் மூக்குத்தி வாங்கினால் கூட 6 ஆயிரம் அல்லது 7 ஆயிரத்திற்கு வந்துவிடுமே! ஏழை, நடுத்தர மக்கள் வீட்டில் பெண் குழந்தைகள் பூப்பெய்துவிட்டால் அவர்களுக்கு மூக்குத்தி போட்டு விட்டு அழகு பார்ப்பார்கள். ஆனால் இன்று தங்கம் விற்கும் விலைக்கு!

நவம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

26.11.2025-ஒரு சவரன் ரூ.94,400

25.11.2025-ஒரு சவரன் ரூ.93,760

24.11.2025 - ஒரு சவரன் ரூ.92,160

23.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040

22.11.2025 - ஒரு சவரன் ரூ.93,040

21.11.2025 - ஒரு சவரன் ரூ.91,680

20.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000

19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800 (மாலை)

19.11.2025 - ஒரு சவரன் ரூ.92,000 (காலை)

18.11.2025 - ஒரு சவரன் ரூ.91,200

17.11.2025 - ஒரு சவரன் ரூ.92,320

16.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400

15.11.2025 - ஒரு சவரன் ரூ.92,400

14.11.2025 - ஒரு சவரன் ரூ.93,920

14.11.2025 - ஒரு சவரன் ரூ.94,720

13.11.2025 - ஒரு சவரன் ரூ.95,200

12.11.2025 - ஒரு சவரன் ரூ.92,800

11.11.2025 - ஒரு சவரன் ரூ.93,600

10.11.2025 - ஒரு சவரன் ரூ.91,840

09.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400

08.11.2025 - ஒரு சவரன் ரூ.90,400

07.11.2025 - ஒரு சவரன் ரூ.90,160

06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,560

06.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000

05.11.2025 - ஒரு சவரன் ரூ.89,440

04.11.2025 - ஒரு சவரன் ரூ.90,000

03.11.2025- ஒரு சவரன் ரூ.90,800

02.11.2025- ஒரு சவரன் ரூ.90,480

01.11.2025- ஒரு சவரன் ரூ.90,400

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+