Gold Rate Today: தங்கம் விலை மேலும் குறையுமா? சென்னையில் நாளை பதுங்குமா பாயுமா?
சென்னை: சென்னையில் தங்கம் விலை இன்று (மார்ச் 2) மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலைக்கே விற்பனையாகிறது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் பிப்ரவரி மாதம் முடிந்த போது தங்கத்தின் விலை சவரன் ரூ 63,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் மார்ச் 1ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 20 குறைந்து ஒரு கிராம் ரூ 7,940-க்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ 63,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களாக தங்கம் விலை சவரனுக்கு ரூ 1350 குறைந்த நிலையில் இன்றைய தினம் தங்கம் விலை என்னவாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. அது போல் வெள்ளியின் விலையிலும் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாளை மார்க்கெட் திறப்பின் முதல் நாள் தங்கத்தின் விலை குறையுமா இல்லை எகிறுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications