Gold Rate Today: அட்சய திருதியை முடிஞ்சாச்சு! சென்னையில் இன்றும் தங்கம் விலை சரிவோ சரிவு
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 2) சவரனுக்கு ரூ 160 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ 70,040-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,800 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
மே 2 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை கிராமுக்கு ரூ 20 குறைந்து ஒரு கிராம் ரூ 8,755-க்கும் ஒரு சவரன் ரூ 70,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications