Gold Rate Today: தங்கத்தின் விலை இன்றும் பெரும் சரிவு! சென்னை மக்கள் கோல்டு வாங்க சரியான நேரம் இது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 5) சவரனுக்கு ரூ 720 குறைந்து, ஒரு சவரன் ரூ 66,480-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் ரூ 5 குறைந்து ஒரு கிராம் ரூ 103-க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ 2000 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.

ஏப்ரல் 1ஆம் தேதி தங்கத்தின் விலை சவரன் ரூ 68,080-க்கும் ஏப்ரல் 2ஆம் தேதி மாற்றமில்லாமல் அதே விலையிலும் நேற்றைய தினம் ரூ 68,480-க்கும் அதாவது சவரனுக்கு 400 உயர்ந்து விற்பனையானது.

ஏப்ரல் 5ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 720 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 66,480-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 90 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,310-க்கு விற்பனையாகிறது. கடந்த சில வாரங்களாக தொடர்ந்து உச்சத்தில் இருந்த தங்கத்தின் விலை கடந்த இரு தினங்களாக சவரனுக்கு ரூ 2000 குறைந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080

Take a Poll

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+