Gold Rate Today: எகிறிய தங்கம் விலை! மார்க்கெட் திறந்ததுமே இப்படியான அதிர்ச்சியா?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 5) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 70,200-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ 1,800 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
மே 5 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 8,775-க்கும் ஒரு சவரன் ரூ 70,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications