Gold Rate: வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்! டிரம்பின் செயலால் எகிறிய தங்கம் விலை! ரூ.1,280 அதிகரிப்பு
சென்னை: சென்னையில் ஜனவரி 5-ஆம் தேதியான இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1,280 அதிகரித்துள்ளது. காலையில் சவரனுக்கு ரூ.640 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ரூ.640 அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அது போல் வெள்ளியின் விலையும் காலை மாலை என இருவேளைகளிலும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
மாலையிலும் அதிகரித்த தங்கம் விலை
ஜனவரி 5-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,01,440 -க்கும், கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,680-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு 8 ரூபாய் ஒரு கிராம் ரூ 265-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,65,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் மாலையிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. மாலையிலும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.640 அதிகரித்து தற்போது ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.1,02,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் சென்னையில் இன்று ரூ.13,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலையில் ஒரு கிராம் ரூ.8 அதிகரித்த நிலையில் மாலையில் மேலும் ஒரு ரூபாய் அதிகரித்து ரூ.266க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்துள்ளதால் தங்கம், வெள்ளி விலையுடன் கச்சா எண்ணெயின் விலையும் உயரக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மார்க்கெட் திறந்த முதல் நாளே தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications