Gold Rate Today: தங்கம் விலை நேற்று போல் இன்றும்! நாளை மார்க்கெட் திறந்தால் என்னவாகுமோ!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 6) தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ 72,480-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,060-க்கு விற்கப்படுகிறது. நாளை மார்க்கெட் திறந்ததும் தங்கம் விலை அதிர்ச்சி கொடுக்குமா, இல்லை ஆறுதலாக இருக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 74,560- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மே, ஜூன் மாதங்களில் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
ஜூலை 6 ஆம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ 9,060-க்கும் ஒரு சவரன் ரூ 72,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் குறைந்து வந்தது, திடீரென அதிகரித்தது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
30.06.2025 - ஒரு சவரன் ரூ.71,320
29.06.2025 - ஒரு சவரன் ரூ.71,440
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications