Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சரிந்தது! நேற்றைய ஷாக்கில் இருந்து மீண்ட மக்கள்
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 7) சவரனுக்கு ரூ 560 குறைந்து ஒரு சவரன் ரூ 63,920-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ 7990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ 50 குறைந்து ரூ 7,960-க்கும் ஒரு சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 63,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி சவரனுக்கு மேலும் 160 ரூபாய் குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ரூ 63,520-க்கு விற்பனையானது.
அது போல் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் 4ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ 8ஆயிரத்தை தாண்டி ரூ 8,010-க்கு விற்பனையாழது.
அது போல் மார்ச் 5ஆம் தேதி சவரனுக்கு ரூ440 உயர்ந்தது. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ 64,520-க்கு விற்பனையானது. இந்தநிலையில் நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 360 சரிந்ததால் மக்கள் உற்சாகமடைந்தனர். இதனால் சவரன் ரூ 64,160-க்கு விற்பனையானது. விலை குறைப்பு நடந்த அடுத்த 3 மணி நேரத்தில் திடீரென தங்கம் விலை அதிகரித்தது. ஒரு சவரனுக்கு ரூ 320 உயர்ந்து சவரன் ரூ 64,480-க்கு விற்பனையானது. ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இன்றைய தினம் (மார்ச் 7) தங்கத்தின் விலை கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சவரனுக்கு ரூ 560 குறைந்துள்ளது. இதனால் சவரன் விலை ரூ 63,920-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 70 குறைந்து, ஒரு கிராம் ரூ 7990-க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
07.03.2025- ஒரு சவரன் ரூ.63,920
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,480 (மாலை கூடிய விலை)
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,160 (காலை குறைந்த விலை)
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680












Click it and Unblock the Notifications