Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு! மகளிர் தினத்தில் பெண்களுக்கு ஷாக்!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 8) சவரனுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு சவரன் ரூ 64,320-க்கும் ஒரு கிராம் ரூ 8040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மகளிர் தினத்தன்று தங்கம் விலை உயர்ந்திருப்பது பெண்களை கவலைக்குள்ளாகியுள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. இந்த பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை அதிகபட்சமாக சவரனுக்கு ரூ 64,600 என கடந்த 25 ஆம் தேதி விற்பனையானது. அது போல் மிக குறைந்த விலை என பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ 61,960 -ஆக இருந்தது.
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ 50 குறைந்து ரூ 7,960-க்கும் ஒரு சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 63,680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 1ஆம் தேதி சவரனுக்கு மேலும் 160 ரூபாய் குறைந்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் ரூ 63,520-க்கு விற்பனையானது.
அது போல் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது. இந்த நிலையில் 4ஆம் தேதி முதல் தங்கம் விலை உயரும் என சொல்லப்பட்டது. அதன்படி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ 70 உயர்ந்து மீண்டும் ஒரு கிராம் ரூ 8ஆயிரத்தை தாண்டி ரூ 8,010-க்கு விற்பனையாழது.
அது போல் மார்ச் 5ஆம் தேதி ஒரே நாளில் தங்கம் விலை குறைந்தும் கூடியும் போனது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மார்ச் 8ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு சவரன் விலை ரூ 64,320-க்கு விற்பனையாகிறது. அது போல் கிராமுக்கு ரூ 10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ 8,040-க்கு விற்பனையாகி வருகிறது. வெள்ளியின் விலையும் கிராம் ரூ 108க்கு விற்பனையாகிறது.
கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,480 (மாலை கூடிய விலை)
06.03.2025- ஒரு சவரன் ரூ.64,160 (காலை குறைந்த விலை)
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications