Gold Rate Today: தங்கம் விலை பெரும் சரிவு! சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 9) சவரனுக்கு ரூ 920 குறைந்து ஒரு சவரன் ரூ 72,120-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் ரூ 920 குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.

மே 9 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 920 குறைந்துள்ளது. இதனால் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 9,015-க்கும் ஒரு சவரன் ரூ 72,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025- ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025- ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,800 (மாலை)
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,200 (காலை)
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+