தங்கம் விலை இன்று மீண்டும் அதிரடியாக உயர்வு.. வெள்ளி விலை ஒரே நாளில் 10000 உயர்ந்து ட்விஸ்ட்
சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சம் தொட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து, நேற்று ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கு விற்பனையானது. வெள்ளிவிலையும் இரண்டு நாளில் 8 ஆயிரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை டிசம்பர் 24ம் தேதியான இன்றும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,800க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.1,02,400ஆக உயர்ந்து விற்பனையாகிறது.
புலி வருது, புலி வருது என்ற கதையாக தங்கம் விலை ஒரு லட்சத்தை தொடப்போகிறத என்று பூச்சாண்டி காட்டி வந்தது. ஆனால் நினைத்து போலவே ஒரு லட்சத்தை தொட்டது மட்டுமின்றி அதனைவிட 2 ஆயிரம் அதிகமாகவே உள்ளது. உலக தங்க கவுன்சில் இந்த ஆண்டு தொடக்கத்திலேயே ஒன்றை கூறியிருந்தது.

புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்றும். எனவே இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தொடும் என கணித்தது. அதுபோலவே ஆண்டு இறுதியில் தங்கம் விலை ஒரு லட்சத்தை தாண்டிவிட்டது. அதேபோல் அடுத்த ஆண்டு (2026) இறுதிக்குள் ரூ.2 லட்சத்தை தங்கம் நெருங்கும் என உலக தங்க கவுன்சில் கணித்துள்ளது. அதற்கேற்றாற்போல், தங்கம் விலை மேலும் மேலும் உயர தொடங்கி உள்ளது. அத்துடன் ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தில் பயணிக்கிறது.
அதனை உறுதி செய்யும் விதமாக தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் விலை எகிறி காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 570-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், பவுனுக்கு ரூ.1,600-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 770-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,960 உயர்ந்து, நேற்றும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. தங்கம் விலை டிசம்பர் 24ம் தேதியான இன்றும் உயர்ந்துள்ளது. ஒரு சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.12,800க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.1,02,400ஆக உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் ஒருபக்கம் ஏறிக்கொண்டே இருக்கிறதே என்று வெள்ளியை திரும்பி பார்த்தால், வெள்ளி விலை தங்கத்தைவிவும் ஜெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்திருந்த நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.234-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. டிசம்பர் 24ம் தேதியான இன்று வெள்ளி விலை ஒரு கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து 244க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ஒரே நாளில் 10 ஆயிரம் உயர்ந்து 2 லட்சத்து 44 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.
வெறும் இரண்டு நாளில் வெள்ளி விலை கிலோவிற்கு 8000 உயர்ந்துள்ளது. தங்க நகைகளை பொறுத்தவரை ஒரு லட்சத்து இரண்டாயிரம் என்று ஒரு சவரன் இருந்தாலும், செய்கூலி சேதாரம் 10 சதவீதத்திற்கு மேல் இருக்கும். ஜிஎஸ்டியும் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒரு சவரன் தங்க நகை வாங்க 1.20லட்சம் வரை தர வேண்டியதிருக்கும்.
-
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் கடன் வாங்க போறீங்களா? லோன் எடுப்பதில் வரப்போகும் சிக்கல்.. மத்திய அரசின் புது கட்டுப்பாடு? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
அவ்வளவு தான்..சோலி முடிஞ்சு! தள்ளாடுதே தங்கம்! காசை போட்டவர்கள் பெரும் கவலை! எதனால் இப்படி நடக்குது? -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி












Click it and Unblock the Notifications