Madurai Gold rate: ஏனுங்க கோயமுத்தூர்ல நகை விலை என்னன்னு தெரியுமா? மதுரையில் ஷாக்
மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயமுத்தூரில் தங்கத்தின் விலை இன்று (ஏப்ரல் 16) சவரனுக்கு ரூ 760 குறைந்து ஒரு சவரன் ரூ 70,520-க்கு விற்பனையாகிறது. அது போல் சவரன் விலை மீண்டும் ரூ 70 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் , பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது.
தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் ஏப்ரல் 15ஆம் தேதி புத்தாண்டு தினத்தில் 22 கேரட் தங்கத்தின் விலை சவரன் ரூ 280 குறைந்து, ஒரு சவரன் ரூ 69,760-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8,720-க்கு விற்பனையாகிறது.
கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,518-க்கும், ஒரு சவரன் விலை ரூ 76,144-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையிலும் மதுரையிலும் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,225-க்கும், ஒரு சவரன் விலை ரூ 57,800-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மார்ச் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக மார்ச் 1ஆம் தேதி ரூ 63,520-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 31 ஆம் தேதி ரூ 67,600-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
16.04.2025- ஒரு சவரன் ரூ.70,520
15.04.2025- ஒரு சவரன் ரூ.69,760
14.04.2025- ஒரு சவரன் ரூ.70,040
13.04.2025- ஒரு சவரன் ரூ.70,160 (மாற்றமில்லை)
12.04.2025- ஒரு சவரன் ரூ.70,160
11.04.2025- ஒரு சவரன் ரூ.69,960
10.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
09.04.2025- ஒரு சவரன் ரூ.67,260 (மதியம்)
09.04.2025- ஒரு சவரன் ரூ.66,300
08.04.2025- ஒரு சவரன் ரூ.65,800
07.04.2025- ஒரு சவரன் ரூ.66,280
06.04.2025- ஒரு சவரன் ரூ.66,480 (ஞாயிற்றுக்கிழமை)
05.04.2025- ஒரு சவரன் ரூ.66,480
04.04.2025- ஒரு சவரன் ரூ.67,200
03.04.2025- ஒரு சவரன் ரூ.68,480
02.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
01.04.2025- ஒரு சவரன் ரூ.68,080
-
Gold Price: இன்றும் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. நகை பிரியர்கள் குஷி! 8 நாட்களில் 4,480 சரிந்தது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications