Madurai Gold rate: தங்கம் விலை விர்ர்ர்! மதுரை, கோவையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி!
மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தங்கத்தின் விலையில் இன்று (ஜூன் 2) மார்க்கெட் திறந்ததுமே சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 71,600-க்கும், கிராமுக்கு ரூ 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 8,950 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் , பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் ஜூன் 2 ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ 71,600-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8,950-க்கு விற்பனையாகிறது.
கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,764-க்கும், ஒரு சவரன் விலை ரூ 78,112-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையிலும் மதுரையிலும் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,370-க்கும், ஒரு சவரன் விலை ரூ 58,960-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையானது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் காரணமாக அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.
கடந்த மே 28ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025- ஒரு சவரன் ரூ.71,960
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications