Madurai Gold rate: கோவையில் தங்கம் விலை தொடர் சரிவு! மதுரையில் மக்கள் ஹேப்பி அண்ணாச்சி!
மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயமுத்தூரில் தங்கத்தின் விலை இன்று (மே 2) சவரனுக்கு ரூ 160 குறைந்து ஒரு சவரன் ரூ 70,040-க்கு விற்பனையாகிறது. கடந்த இரு நாட்களில் சவரனுக்கு ரூ 1800 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.
சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் மே 2 ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 குறைந்து ஒரு சவரன் ரூ 70,040-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8,755-க்கு விற்பனையாகிறது.
கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,551-க்கும், ஒரு சவரன் விலை ரூ 76,408-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையிலும் மதுரையிலும் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,240-க்கும், ஒரு சவரன் விலை ரூ 57,920-க்கும் விற்பனையாகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் காரணமாக அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களாக தங்கம் விலை சரிந்துள்ளது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200












Click it and Unblock the Notifications