Madurai Gold rate: 72 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! மதுரை, கோவையில் நகை பிரியர்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயம்புத்தூரில் தங்கத்தின் விலையில் இன்று (ஜூன் 3) சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 72,640-க்கும், கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 9,080 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் , பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.

சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் ஜூன் 3 ஆம் தேதி 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ 72,640-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,080-க்கு விற்பனையாகிறது.

கோவையிலும் மதுரையிலும் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,885-க்கும், ஒரு சவரன் விலை ரூ 79,080-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையிலும் மதுரையிலும் 18 கேரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,461-க்கும், ஒரு சவரன் விலை ரூ 59,688-க்கும் விற்பனையாகிறது.

கடந்த மே மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 15 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.68,880-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 8ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,040 க்கு விற்பனையானது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் காரணமாக அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த ஜூன் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025- ஒரு சவரன் ரூ.71,960

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+