ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை.. கோல்டு காயின் மீது ஆர்வம் காட்டும் மக்கள்! ஆடிப்போயிட்டாங்க!
சென்னை: தங்கம் விலை 10 கிராமிற்கு 1 லட்சம் ரூபாயை மீண்டும் நெருங்கி வருகிறது. இந்த நிலையில் மக்கள் பலரும் தங்க காயின் வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக நகைக்கடைகள் தெரிவித்துள்ளன. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,808 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,990 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,410 ஆகவும் உள்ளது.
இப்படிப்பட்ட நிலையில், தங்க நகைகளை விட தங்க நாணயங்களை வாங்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். தங்க நாணயங்கள் தூய தங்கத்தால் ஆனவை. தங்க நாணயங்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை பல்வேறு மதிப்புகளில் வருகின்றன, மேலும் 22 அல்லது 24 காரட் என்ற வெவ்வேறு தூய்மை நிலைகளுடன் வருகின்றன.

இதற்கு செய்கூலி பெரும்பாலும் பூஜ்யம் என்பதுதான் அவற்றை மலிவு விலையில் வைத்திருக்க உதவுகிறது. கூடுதலாக, அதை பணமாக மாற்றுவதும் எளிதானது. தங்க பார் போல இல்லாமல் தங்க நாணயங்களை எளிதாக விற்க முடியும். இன்னும் வேகமாக பணமாக மாற்ற முடியும்.
தங்க நாணயங்களுக்கு நிச்சயமாக அதிக தேவை உள்ளது, குறிப்பாக தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால். வாடிக்கையாளர்கள் அவற்றை ஒரு புத்திசாலித்தனமான, குறைந்த ஆபத்துள்ள முதலீடாகப் பார்க்கிறார்கள், தேவைப்படும்போது விற்கவும் எளிதானது. சிறப்பான விஷயம் என்னவென்றால், அவை பல்வேறு எடைகளில் வருகின்றன, எனவே சிறிய முதலீட்டாளர்கள் கூட அவற்றை வசதியாக வாங்க முடியும் என்று நகை கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தங்கம் விலை அதிகரிப்பு
அதேபோல் மக்கள் பலரும் 22, 24 கேரட் தங்கத்திற்கு பதிலாக 18வது கேரட் தங்கத்தை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலை 2024ல் 25% உயர்ந்தது. இதை தொடர்ந்து 2025ல் தங்கத்தின் விலை இதுவரை 22% உயர்ந்துள்ளது. இதனால் இந்தியக் குடும்பங்கள் தங்கத்தை பட்ஜெட்டுக்குள் வாங்குவதற்கு வசதியாக குறைந்த காரட் நகைகளைத் தேர்வு செய்ய தொடங்கி உள்ளனர்.
இதனால் 18 காரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்து வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர், இது பாரம்பரியமான 22 காரட்டை விட கிட்டத்தட்ட 20% குறைவு. குறைவான விலையில் கிடைக்கும். இதனால் மக்கள் பலரும் இதை விரும்புகின்றனர். முக்கியமாக திருமண சீசனில் அதிகம் பயன்படுத்த இதை வாங்குகின்றனர். இதனால் கூடுதல் சீர் கொடுக்க முடியும் என்ற சூழல் உள்ளது.
காரட் தங்கம்
காரட் என்பது தங்கத்தின் தூய்மையை அளக்கப் பயன்படும் ஒரு அலகாகும், இது 9 மற்றும் 24 க்கு இடைப்பட்ட எண்ணாக பொதுவாக இருக்கும். காரட் அதிகமாக இருந்தால், தங்கம் தூய்மையானது.
24 காரட்: தூய தங்கம், வேறு எந்த உலோகமும் இல்லை
18 காரட்: 75% தங்கம் மற்றும் 25% செம்பு அல்லது வெள்ளி போன்ற மற்ற உலோகங்கள்
22 காரட்: 91.67% தூய தங்கம், வெள்ளி, துத்தநாகம், நிக்கல் அல்லது செம்பு போன்ற 2 பாகங்கள் மற்ற உலோகங்கள் சேர்க்கப்படும்.
14 காரட்: 58.3% தூய தங்கம் மற்றும் 41.7% மற்ற உலோகங்கள்
9 காரட் தங்கம் என்பது 37.5% தூய தங்கம் மற்றும் 62.5% வெள்ளி அல்லது தாமிரம் போன்ற மற்ற உலோகங்களின் கலவையாகும்.
இது தூய்மை குறைவான தங்கம் என்றாலும் விலை மிக குறைவாக எல்லோராலும் வாங்கும் வகையில் இருக்கும். இன்று நிலவரப்படி சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,791 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,975 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,395 ஆகவும் உள்ளது.
எந்த தங்கம் வாங்குவது பெஸ்ட்?
இதில் 22கே, 24கே, 18கே என்பது தங்கத்தில் செய்யப்படும் கலப்படத்தின் அளவு ஆகும். தூய்மையின் அடிப்படையில் 24 கேரட்தான் சிறந்தது. ஆனால் அதன் விலை அதிகம். அதே சமயம் ஆர்பிஐ விதிகளின் படி நீங்கள் எக்கச்சக்கமாக நீங்கள் தங்கத்தை வைத்துக்கொள்ள முடியாது. அதற்கு என்று ஒரு கட்டுப்பாடு இருக்கிறது.
நீங்கள் வீட்டில் தங்கத்தை ஒரு வரம்பு வரை சேமித்து வைத்தால், யாரும் உங்கள் மீது அதிகாரப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது. அதுவே உங்கள் வீட்டில் குறிப்பிட்ட அளவு தங்கத்திற்கு மேல் இருந்தால்.. அந்த தங்கம் வாங்கியதற்கான ஜிஎஸ்டி வரிகள் எல்லாம் தாண்டி.. மற்ற சொத்து வரிகள் வருடா வருடம் கட்டப்பட வேண்டும்.
திருமணமாகாத பெண்கள் - திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்கலாம். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமாகாத ஆண்கள்- திருமணமாகாத ஆண்கள் 100 கிராம் தங்கம் மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது. இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான பெண்கள்- திருமணமான பெண்கள் 500 கிராம் வரை மட்டுமே தங்கத்தை வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
திருமணமான ஆண்கள் - அதேசமயம் திருமணமான ஆண்கள் 100 கிராம் தங்கத்தை மட்டுமே வீட்டில் வைத்திருக்க முடியும். இது 24 கேரட் தங்கம் என்றால் பில் இருக்க வேண்டும்.
-
கோல்டு ETF, வெள்ளி ETF-களில் முதலீடு செய்தவர்கள் கண்ணீர்.. திடீரென சரிவது ஏன்? அடுத்து என்ன செய்ய வேண்டும்? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications