சர்வதேச சந்தையே குலுங்குது.. தங்கத்தை வாங்கி குவிக்கும் உலகின் பவர்புல் அமைப்புகள்.. கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுக்க இருக்கும் மிகப்பெரிய பொருளாதார பவர் புல் அமைப்புகளான அமெரிக்காவின் மத்திய வங்கி அமெரிக்காவின் Sovereign Wealth Funds அமைப்புகள் எல்லாம் தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. இது சர்வதேச சந்தையில் ஏற்படும் பெரிய மாற்றமாக கருதப்படுகிறது.

சர்வதேச சந்தையில் இதனால் பணம்.. அதாவது டாலர் உள்ளிட்ட எந்த விதமான பணத்தின் மதிப்பும் வரும் நாட்களில் மிக மோசமாக சரியலாம் என்று கணிக்கப்படுகிறது. பணத்தின் சரிவை கணித்தே உலகின் மத்திய வங்கிகள் அடுத்தடுத்து தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தங்கம்தான் உண்மையான பணம்.. அது உலகிற்கு உண்மையில் தெரிய வர தொடங்கி உள்ளது. பெரிய பொருளாதார சரிவை, பண மதிப்பு சரிவை எதிர்பார்த்தே உலக நாடுகள் தங்கத்தை வாங்கி குவிப்பதாக சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுக்க தொடங்கி உள்ளனர்.

உலகளவில் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் மொத்த தங்கம் 2009 ஆம் ஆண்டில் 26,000 டன்னாக இருந்தது, 2024 ஆம் ஆண்டில் 32,000 டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இவர்கள் இரண்டரை டன்னுக்கு மேல் தங்கம் வாங்கி உள்ளனர்.

இந்தியா உட்பட உலகின் டாப் 10 மத்திய வங்கிகள் இதில் பெரும்பகுதியை வைத்துள்ளன. அதாவது 76% தங்கத்தை 10 நாடுகள் வைத்திருக்கின்றன. உலக தங்க கவுன்சில் தரவுகளின் அடிப்படையில் பார்த்தால் , 2009 முதல் 2024 வரை மத்திய வங்கிகளின் தங்க இருப்பு ஆண்டுதோறும் 4.1% வளர்ந்ததாகக் கூறுகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஜப்பான், நெதர்லாந்து, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

Gold Rate is not smooth anymore it will go parabolic soon

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்கம் வாங்குவதை நாளுக்கு நாள் உயர்த்த தொடங்கி உள்ளது. தாறுமாறாக தங்கம் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும், அது 57.5 டன் தங்கத்தை இந்தியா வாங்கியது, இது 2017 க்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச வருடாந்திர கொள்முதல் ஆகும்.

இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது. உலக அளவில் பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருகிறது. சர்வதேச பொருளாதாரத்தில் அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத மோசமான சூழல் நிலவி வருகிறது. பல நாடுகளும் தங்கத்தை இதனால் வாங்கி குவிக்க தொடங்கி உள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில், RBI-யின் தங்க இருப்பு 35% அதிகரித்து, FY20 இல் 653 டன்னிலிருந்து மார்ச் 2025 இல் 880 டன்னாக உயர்ந்துள்ளது.

உலக தங்க தரவரிசையில் இந்தியாவும் உயர்ந்துள்ளது - தங்க இருப்பு அடிப்படையில் உலகில் ஏழாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2015 இல் பத்தாவது இடத்தில் இருந்து. 10 வருடங்களில் 3 இடங்கள் மேலே வந்துள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி இருப்பில் தங்கம் இப்போது 11.35% ஆகும், இது 2021 இல் 6.86% ஆக இருந்தது.

RBI ஏன் அதிக தங்கத்தை வாங்குகிறது?:

சமீபத்திய ஆண்டுகளில் டாலர் நிலையற்றதாக உள்ளது, மேலும் தங்கம் மிகவும் நிலையான பொருளாதாரத்தை வழங்குகிறது. அமெரிக்க டாலர் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் இருப்பு நாணயமாக இருந்தாலும், அதன் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக டாலரை நம்ப முடியாது. அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக டாலர் இருப்புக்களை வைத்திருக்கும் மத்திய வங்கிகள் கடுமையான பாதிப்புகளை சந்திக்கின்றன.

ஏனென்றால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் பணத்தின் மதிப்புகள் மோசமாக சரியும். ஆனால் தங்கத்தின் மதிப்பு உயரும். பொருளாதார சரிவுகளில் போது தங்கத்தின் மதிப்பே ஒரு நாட்டை காக்கும்.இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியா கடந்த சில மாதங்களாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.

இந்தியாவின் ரிசர்வ் வங்கி தங்கத்தை வாங்கி குவிப்பதில் தீவிரமாக உள்ளது. தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, அதன் தங்கத்தின் மதிப்பு ஒரே வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்துள்ளது. இந்த உயர்வின் மூலம், ரிசர்வ் வங்கியின் மொத்த தங்க கையிருப்பு மதிப்பு ரூ.6,88,496 கோடியாக உயர்ந்துள்ளது என ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+