போச்சு.. டிரம்ப் சொன்ன ஒரே ஒரு விஷயம்.. மளமளவென சரியும் தங்கம் விலை.. உடனே உஷார் ஆகுங்க!
நியூயார்க்: அமெரிக்க டாலர் வலுப்பெற்றதாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு எதிராக அறிவித்த அதிக வரிகள் நீண்ட காலம் நீடிக்காது என்ற கருத்துக்களாலும், தங்கம் விலை $4,300 என்ற உச்சத்தில் இருந்து சரிந்தது. அடுத்த சில நாட்கள் இதேபோல் தங்கம் விலை சரியும் என்று கூறப்படுகிறது.
ஃபாக்ஸ் பிசினஸிடம் பேசிய டிரம்ப், சீனாவிற்கு எதிராக வரி போட்டு இருக்கிறோம். ஆனால் இதை நீண்ட நாட்கள் நீடிக்காது. விரைவில் அந்த வரிகள் நீக்கப்பட வேண்டி இருக்கும். அதுதான் சூழல். இப்போது இந்த வரியை போட வேண்டி சூழல் இருக்கும். அதற்காக நான் நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறேன். நிலைமை விரைவில் மாறும், என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவுடன் சமாதானமாகி செல்லும் வகையில் டிரம்ப் பேசியதால்.. தங்கம் விலை சரியும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

அவரின் இந்த செயல் காரணமாக ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் 2.2% குறைந்து $4,228.89 ஆக இருந்தது. முன்னதாக, இது $4,378.69 என்ற புதிய உச்சத்தை எட்டியது. வியாழக்கிழமை அன்றுதான் தங்கம் $4,300 என்ற எல்லையைத் தாண்டியது. இந்த வாரத்தில் 5.2% லாபத்துடன் முடிவடைய வாய்ப்புள்ளது.
ஸ்பாட் வெள்ளி 4.1% சரிந்து அவுன்ஸ் $51.99 ஆக இருந்தது. இது $54.47 என்ற சாதனை உச்சத்தை எட்டியிருந்தது. தங்கம் நகர்வுகளைப் பின்பற்றி, இந்த வாரத்தில் 7.4% லாபத்தை அடைய வாய்ப்புள்ளது. டிசம்பர் மாத அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 1.5% குறைந்து $4,239.30 ஆக இருந்தன.
தங்கம் விலை சரியும்
வர்த்தக போர் காரணமாக தற்போது தங்கம் அதிகப்படியான விற்பனை நிலையில் உள்ளதால், குறுகிய காலத்தில் 5-6% சரிவைக் காணலாம்.. அதாவது அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்காத திடீர் சரிவு இருக்கும்.. பின்னர் 2026-ஆம் ஆண்டில் 4,200 டாலருக்கும் மேல் புதிய உச்சத்தை அடையலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு மட்டும் சுமார் 40% லாபம் ஈட்டியுள்ள தங்கம், 2024-ல் 27% உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 3,680 டாலராக வர்த்தகமானது. முன்னதாக இன்றைய அமர்வில் 3,689.27 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, வலுவான முதலீட்டுத் தேவை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாக 2026-ஆம் ஆண்டிலும் தங்கத்தின் ஏற்றம் தொடரும் என பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஏற்றத்திற்கு முன்பாக கண்டிப்பாக ஏற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் விலை சுமார் 3,800 டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கிறது.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு ஒரு சாத்தியமான திருத்தத்தை நாம் காணலாம். அதாவது விலை சரிவு இருக்கும். அது கொஞ்சம் பெரிய சரிவாக இருக்கும். ஆனால், இது சந்தையில் நுழைய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பாக அமையும். 2026-ல் தங்கம் 4,000 டாலருக்கும் மேல் உயரக்கூடும்" என்று நியூமன் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக அமையும். அப்போது தங்கம் வாங்கினால் அது அடுத்த ஆண்டில் கடுமையான பலனை கொடுக்கும்.
-
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications