தங்க மார்க்கெட்டில் பெரிய பூகம்பம் நடக்க போகுது.. தங்கம் விலை தாறுமாறாக சரியும்.. ஏன் தெரியுமா?
சென்னை: நேற்று தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 0.4% அதிகரித்து 3,692.87 அமெரிக்க டாலராக உயர்ந்தது. இன்றைய நாளின் தொடக்கத்தில் இது 3,698.86 டாலராக உச்சம் தொட்டது.
டிசம்பர் மாதத்திற்கான அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.3% உயர்ந்து 3,730.50 டாலராக இருந்தது. எனினும், தங்கத்தின் விலை 2026-ஆம் ஆண்டில் 4,000 டாலரை எட்டுவதற்கு முன்பு, ஒரு ஆரோக்கியமான சரிவைக் காணக்கூடும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

இது தொடர்பாக நிபுணர்கள் வெளியிட்டு உள்ள கணிப்பில், நீண்டகால தங்கத்தின் ஏற்றம் தொடரும் குறிப்பாக, மத்திய வங்கிகள் மற்றும் ஈடிஎஃப் (ETF) முதலீட்டாளர்களிடமிருந்து வரும் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கத்தின் விலை கண்டிப்பாக உயரும்.
ஆனால் அதில்தான் ஒரு ட்விஸ்ட் உள்ளது. வர்த்தக போர் காரணமாக தற்போது தங்கம் அதிகப்படியான விற்பனை நிலையில் உள்ளதால், குறுகிய காலத்தில் 5-6% சரிவைக் காணலாம்.. அதாவது அடுத்த சில மாதங்களில் எதிர்பார்க்காத திடீர் சரிவு இருக்கும்.. பின்னர் 2026-ஆம் ஆண்டில் 4,200 டாலருக்கும் மேல் புதிய உச்சத்தை அடையலாம் என்று வல்லுனர்கள் கருதுகின்றனர்.
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை
இந்த ஆண்டு மட்டும் சுமார் 40% லாபம் ஈட்டியுள்ள தங்கம், 2024-ல் 27% உயர்ந்தது. செவ்வாய்க்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் தங்கம் 3,680 டாலராக வர்த்தகமானது. முன்னதாக இன்றைய அமர்வில் 3,689.27 டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியிருந்தது.
அமெரிக்க வட்டி விகிதக் குறைப்பு, வலுவான முதலீட்டுத் தேவை மற்றும் புவிசார் அரசியல் அபாயங்கள் காரணமாக 2026-ஆம் ஆண்டிலும் தங்கத்தின் ஏற்றம் தொடரும் என பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் ஏற்றத்திற்கு முன்பாக கண்டிப்பாக ஏற்றம் இருக்கும் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தங்கம் 4,000 டாலரை எட்டும்
2026-ஆம் ஆண்டில் தங்கம் 4,000 டாலரை எட்டும் என்று ஆய்வாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆனால், ஏபிசி ரிஃபைனரியின் (ABC Refinery) சர்வதேச சந்தைகளின் தலைவர் நிக்கோலஸ் ஃபிராப்பல், "நாம் எதிர்பார்த்ததை விட விரைவாக இந்த நிலையை தங்கம் அடைந்துள்ளது. இதனால் துல்லியமாக கணிப்பது கடினம்" என்று தெரிவித்து உள்ளார்
பாரம்பரியமாக புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார அபாயங்களுக்கு எதிரான ஒரு பாதுகாப்புப் புகலிடமாக அறியப்படும் தங்கம், குறைந்த வட்டி விகிதச் சூழலிலும் சிறப்பாக செயல்படுகிறது.
மெட்டல்ஸ் ஃபோகஸ் (Metals Focus) ஆலோசனை நிறுவனம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள ரிப்போர்ட் ஒன்றில், தங்கம் 3,400 மற்றும் 3,500 டாலர் வரம்பில் அதிகம் நேரம் செலவிடாததால், தற்போது அறியப்படாத ஒரு பிரதேசத்தில் இருப்பதாகக் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் விலை சுமார் 3,800 டாலரை எட்டும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த விலை உயர்வுக்குப் பிறகு ஒரு சாத்தியமான திருத்தத்தை நாம் காணலாம். அதாவது விலை சரிவு இருக்கும். அது கொஞ்சம் பெரிய சரிவாக இருக்கும். ஆனால், இது சந்தையில் நுழைய காத்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பாக அமையும். 2026-ல் தங்கம் 4,000 டாலருக்கும் மேல் உயரக்கூடும்" என்று நியூமன் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நீங்கள் தங்கம் வாங்குவது நல்ல வாய்ப்பாக அமையும். அப்போது தங்கம் வாங்கினால் அது அடுத்த ஆண்டில் கடுமையான பலனை கொடுக்கும்.












Click it and Unblock the Notifications