ஒன்றல்ல, இரண்டல்ல.. தங்கத்தின் விலை 229% சதவிகிதம்.. சர்ரென உயரப்போகிறது.. நோட் பண்ணுங்க
டெல்லி: இந்தியாவில் தங்க விலை உச்சத்தை எட்டியுள்ளது. வரவிருக்கும் பண்டிகை மற்றும் திருமண சீசனில் நகை வாங்குவதா அல்லது விலை குறையும் வரை காத்திருப்பதா என்ற குழப்பத்தில் பொதுமக்கள் உள்ளனர்.
ஆனால், சர்வதேச தங்க தரகு நிறுவனங்கள் தங்கத்தின் மீதான மோகம் தொடரும் என்றும், வரும் 7 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 229 சதவீதம் வரை உயரக்கூடும் என்றும் கணித்துள்ளனர்.

தங்கம் விலை பல மடங்கு உயர்வு
சர்வதேச நிச்சயமற்ற தன்மைகளுடன், இந்தியர்களின் பாரம்பரிய கொள்முதல் பழக்கவழக்கங்களும் இந்த ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன. ஆஸ்பெக்ட் புல்லியன் & ரிஃபைனரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தர்ஷன் தேசாய், "தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவை மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமை காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்" என்று குறிப்பிட்டார்.
இந்தியன் புல்லியன் & ஜூவல்லர்ஸ் அசோசியேஷன் (IBJA) துணைத் தலைவர் அக்ஷா கம்போஜ், சந்தையின் மிகக் குறைந்த புள்ளியைக் கண்டறிவது கடினம். அதாவது தங்கம் எவ்வளவு வரை இனி குறையும் என்று சொல்லவே முடியும். குறிப்பிடத்தக்க சரிவு சாத்தியமில்லை என்பதால், படிப்படியாக தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம்.. அடுத்த 7 மாதங்களில் தங்கம் கடுமையான உயர்வை அடையும் என்று அவர் பரிந்துரைத்தார்.
முன்னாள் IBJA தலைவர் மோகித் கம்போஜ், தங்க சந்தை தற்காலிகமாக நிலைபெற்றாலும், பண்டிகை கால தேவை மற்றும் பாதுகாப்பான முதலீடுகளின் வரத்து தங்கத்தின் விலையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைத் தடுக்கும். இது தங்கத்தின் விலை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை 229 சதவீதம் வரை
காரட்லேன் நிர்வாக இயக்குனர் சோமன் பௌமிக், தங்கம் இந்தியர்களுக்கு ஒரு முதலீடு மட்டுமல்ல, தங்கம் வாங்குவது என்பது உணர்ச்சிகள் மற்றும் பாரம்பரியங்களுடன் ஆழமாகப் பிணைந்துள்ளது என்று வலியுறுத்தினார். தங்கத்தை இந்தியர்கள் முதலீடு என்பதை தாண்டி, அதை status ஆக பார்க்கிறார்கள். அதனால் கொஞ்சம் விலை குறைந்தாலும் அதை விரும்புகிறார்கள்.
ஸ்கைகோல்ட் & டைமண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மங்கேஷ் சவுகான், தங்கம் வாங்குபவர்கள் குறைந்த காரட் தங்கம் அல்லது 24 காரட் தங்கத்தை தேர்வு செய்யுமாறு பரிந்துரைத்தார். இது மலிவு விலைக்கும் முதலீட்டுக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் $3650 ஆக உள்ளது. கேபிடல் லீக் நிறுவனத்தின் ராஜுல் கோத்தாரி, தங்கம் விரைவில் $3700-$3800ஐ எட்டும் என்று கணித்துள்ளார். இருப்பினும், குறுகிய காலத்தில் 2 முதல் 5 சதவீதம் சரிவும் சாத்தியம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 1.10 லட்சம். ஸ்விஸ் ஆசியா நிறுவனம் 2032க்குள் தங்கத்தின் விலை 119 முதல் 229 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஒரு கணிப்பை வெளியிட்டுள்ளது. ஒருவேளை 119% அதிகரித்தால், புதிய விலை சுமார் ரூ 2,40,900 ஆகவும், 229% அதிகரித்தால் ரூ 3,61,900 ஆகவும் உயரக்கூடும். அதாவது, அடுத்த ஏழு ஆண்டுகளில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 2.40 லட்சம் முதல் ரூ 3.61 லட்சம் வரை இருக்கலாம்.
ஸ்விஸ் ஆசியா கேபிடல் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரி ஜுர்க் கீனர், அடுத்த சில ஆண்டுகளில் தங்கத்தின் விலை 37 முதல் 120 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறார். சிட்டி குரூப் 9.6 சதவீதம் உயர்ந்து 10 கிராம் தங்கம் சுமார் ரூ 1,20,560 ஆக இருக்கும் என்று மதிப்பிடுகிறது. அதே சமயம் கோல்ட்மேன் சாக்ஸ் 37 சதவீதம் உயர்ந்து 10 கிராம் தங்கம் ரூ 1,50,700 ஆக இருக்கலாம் என்று கணிக்கிறது.












Click it and Unblock the Notifications