Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: இறங்கிய வேகத்தில் ஏற்றம்! 2 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2 நாட்களாக தங்கம் விலை குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்வை நோக்கிச் சென்றுள்ளது.

வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3, கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் 199 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Gold rate today After 2-Day Dip Prices Increase Again in Chennai

தங்கத்தின் விலை நாள்தோறும் கடுமையாக அதிகரித்து புதிய விலை உச்சங்களை தொட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற உச்சத்துக்கு சென்று, அதே மாதம் 28 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.88,600 என்ற நிலைக்கு வந்தது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை 90,480 ரூபாயாக இருந்த நிலையில், டிசம்பர் 1ஆம் தேதி ஒரு சவரனுக்கு 720 ரூபாய் அதிகரித்து 96,560 ரூபாயாக விற்பனையானது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 6,080 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20, சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று கிராமுக்கு ரூபாய் 40, சவரனுக்கு ரூபாய் 320 அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 320 உயர்ந்து ரூ96,320-க்கும், கிராமுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூ.12,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

06.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

05.12.2025- ஒரு சவரன் ரூ.96,000

04.12.2025- ஒரு சவரன் ரூ.96,160

03.12.2025- ஒரு சவரன் ரூ.96,480

02.12.2025- ஒரு சவரன் ரூ.96,320

01.12.2025- ஒரு சவரன் ரூ.96,580

30.11.2025- ஒரு சவரன் ரூ.95,840

29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+