Gold Rate Today: ஆடி வெள்ளியில் நகை பிரியர்களுக்கு ஆறுதல்.. தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை இன்று நோ சேஞ்ச்
சென்னை: கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று தங்கம் விலை மீண்டும் எகிறுமா அல்லது விலை குறைந்து ஆறுதல் அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. நகைப் பிரியர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் நேற்றைய விலைக்கே விற்பனையாகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார சூழலைப் பொறுத்து தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம், வெள்ளி விலை ஏற்றம் இறக்கமாகக் காணப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆகஸ்ட் 4 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை சற்று குறைந்து ரூ.1,05,600 என இருந்தது. 5 ஆம் தேதி திடீரென தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமையும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக உள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.4,400 அதிகரித்து நகை பிரியர்களை மீண்டும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை அதே ஹை பிட்ச்சில் ஏறுமா அல்லது சரிவைக் காணுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில், ஆடி வெள்ளியில் ஆறுதல் அளிக்கும் விதமாக இன்று (ஆகஸ்ட் 7) நேற்றைய விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.13,750-க்கும், சவரன் ரூ.1,10,000-க்கும் விற்பனையாகிறது. அதேபோன்று வெள்ளி விலையும் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000 (இன்று)
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000 (நேற்று)
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720
27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440.


Click it and Unblock the Notifications
