Gold Rate Today: 2வது நாளாக இன்றும் சர்ரென ஏறி ‘ஷாக்’ கொடுத்த தங்கம் விலை.. 2 நாளில் 1240 ரூபாய் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில நாட்களுக்குப் பிறகு நேற்று தங்கம் விலை அதிகரித்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 640 அதிகரித்துள்ளது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் இன்று கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold price Gold Chennai

தங்கம் விலை நிலவரம்

சர்வதேச பொருளாதார நிலைக்கு ஏற்ப தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கம் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த ஏப்ரல் மாதம் புதிய உச்சம் தொட்டது. இதையடுத்து மே மாதத்தில் ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, சில நாட்கள் சரிவைச் சந்தித்தது.

இந்த மாதத்தில் தங்கம் விலை எப்படி?

தமிழகத்தில் கடந்த ஜூன் 4 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,720க்கும், கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,090க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 5 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,040க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,130க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஒரே நாளில் 1,200 ரூபாய் விலை சரிந்தது

ஜூன் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சென்னையில் தங்கம் விலையில் மாற்றமில்லை. ஜூன் 7 ஆம் தேதி சனிக்கிழமை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,840க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.150 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,980க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாள் ஜூன் 8 ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் முந்தைய நாளின் விலையிலேயே தங்கம் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை - நேற்று வரை

ஜூன் 9 ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8,955-க்கும், ஒரு சவரன் ரூ.71,640-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,945-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

ஜூன் 11 ஆம் தேதி புதன்கிழமையான நேற்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் நேற்று கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,020-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலை என்ன?

இன்று தங்கம் விலை கூடுமா? அல்லது குறையுமா? என நகைப் பிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த ஆபரண தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்ததால் இந்த ட்ரெண்ட் அப்படியே மேல்நோக்கிச் செல்லுமா, அல்லது குறையுமா என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 640 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.72,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து 9,100க்கு விற்பனை ஆகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
08.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
07.06.2025- ஒரு சவரன் ரூ.71,840
06.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
05.06.2025- ஒரு சவரன் ரூ.73,040
04.06.2025- ஒரு சவரன் ரூ.72,720
03.06.2025- ஒரு சவரன் ரூ.72,640
02.06.2025- ஒரு சவரன் ரூ.71,600
01.06.2025- ஒரு சவரன் ரூ.71,360

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+