Gold Rate Today: மார்க்கெட் திறந்ததுமே தங்க நகை பிரியர்களுக்கு ‘குஷி’.. தங்கம் விலை ரூ.800 சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.800 சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரன் ரூ.1,05,600க்கு விற்பனையாகிறது, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூபாய் 13,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, பங்குச் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

gold rate silver gold

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், அதன் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த வியாழக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 13,320 ரூபாய்க்கும், சவரன், 1,06,560 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம் 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளிக்கிழமை தங்கம் விலை கிராமுக்கு, 30 ரூபாய் உயர்ந்து, 13,350 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 240 ரூபாய் அதிகரித்து, 1,06,800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

சனிக்கிழமை (ஜூலை 11) 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 400 ரூபாய்க்கும், கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இன்று காலை சென்னையில் வர்த்தகம் தொடங்கியதும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,200-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. சென்னை சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாட்களில்

13-07-2026- ஒரு சவரன்- ரூ.1,05,600

12-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

11-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,400

10-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,800

9-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,560

8-07-2026- ஒரு சவரன்- ரூ.1,06,600

7-07-2026- ஒரு சவரன்- ரூ.1,07,200

6-07-2026- ஒரு சவரன்- ரூ.1,08,480

5-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

4-07-2026- ஒரு சவரன்- ரூ.1,09,600

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+