Gold Rate Today: ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை.. மார்க்கெட் திறந்ததும் அதிர்ச்சி காத்திருக்கு!?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த 4 நாட்களில் மட்டும் ரூபாய் 6,120 அளவுக்கு அதிகரித்தது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் திங்கட்கிழமையான இன்று மேலும் உயருமா என்ற கவலை நகை பிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், யாரும் எதிர்பார்க்காத வகையில், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

gold price gold

தங்கம் விலை ஏற்ற இறக்கம்

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் பெரியளவில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.

ஆகஸ்ட் 5 ஆம் தேதி தங்கம் விலை பெரிய அளவில் உயர்ந்தது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் சேர்த்து சென்னையில் ஒரு சவரன் ரூ.2,240 அதிகரித்தது. இதனால் 5 ஆம் தேதி சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,07,840 க்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமையும் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது. இதனால் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000 ஆக விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.

4 நாட்களில் அதிரடி உயர்வு

வெள்ளிக்கிழமை காலையில் தங்கம் விலையில் மாற்றமின்றி முந்தைய நாள் விலைக்கே விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தங்க நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அன்றூ மாலை தங்கம் விலை உயர்ந்தது. சவரனுக்கு ரூ.1,200 அதிகரித்து, ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.150 அதிகரித்து, ரூ.13,900-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சனிக்கிழமை சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 1,11,720க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.65 உயர்ந்து ரூபாய் 1,3,965க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் 4 நாட்களில் மட்டுமே தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 6,120 உயர்ந்தது.

மீண்டும் உயருமா?

நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்க்கெட் விடுமுறை என்பதால், தங்கம் விலையில் மாற்றம் இன்றி, முந்தைய நாள் விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமையான இன்று, மார்க்கெட் திறக்கப்பட்டதும் தங்கம் விலை மீண்டும் எகிறுமா என்ற கவலை தங்க நகை பிரியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

10.08.2026 - ஒரு சவரன்- ?
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

31.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,040
30.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840
29.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,240
28.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,720

27.07.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,960
26-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
25-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,06,400
24-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,840

23-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,08,000
22-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,07,440
21-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
19-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080

18-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,080
17-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,04,800
16-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,200
15-07-2026 - ஒரு சவரன்- ரூ.1,05,440

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+