Gold Rate Today: தங்கம் வாங்க சூப்பர் சான்ஸ்.. ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ. 360 குறைந்த தங்கம் விலை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ. 360 குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ. 64,200க்கும், 1 கிராம் தங்கம் ரூ. 8,025க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,09,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு பவுன் தங்கத்தை ஒரு லட்சம் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்ற அளவுக்கு கடந்த சில வாரங்களாக அபரிமிதமான விலை உயர்வை தங்கம் சந்தித்து வருகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்ற பின்னர் போர் அபாயம் காரணமாக தங்கத்தின் மீதான முதலீட்டை பொதுமக்கள் அதிகரித்து வருகின்றனர்.

Gold price

ஜனவரி மாதத்தில் தங்கம் விலை ரூ. 60 ஆயிரத்தைக் கடந்தது. அன்று முதல் தொடர்ந்து ஏறுமுகமாக விலை உயர்வை மட்டுமே சந்தித்து வருகிறது. பிப்ரவரி 5 ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் 63 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பிப்ரவரி 11 ஆம் தேதி இந்த விலை 64 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில், ஒரு சில நாள்கள் விலை குறைந்து பொதுமக்களுக்கு குஷியையும் ஏற்படுத்தி வந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ. 520 விலை உயர்ந்தது. ஒரு சவரன் 64,280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் கிராமுக்கு நேற்று ரூ. 65 விலை உயர்ந்து ரூ. 8,035க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

நேற்று ஒரு சவரன் ரூ.64,520க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமிற்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.64,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ. 109க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 109 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1,09,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை:

20.02.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025 (நேற்று) ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025 - ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025 - ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+