Gold rate today: தொடர்ந்து சரியும் தங்கம் விலை.. ஒரே வாரத்தில் ரூ.1080 குறைவு.. இன்றும் உயரவில்லை!
சென்னை: தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாகவே சரிவைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயருமா அல்லது தொடர்ந்து சரியுமா என்ற எதிர்பார்ப்பு நகைப் பிரியர்கள் மத்தியில் நிலவியது. இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றம் இல்லை.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்கம் விலை மாறி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம் விலை. ஜனவரி 31 ஆம் தேதி ஒரு சவரன் ஆபணரத் தங்கம் ரூ.61 ஆயிரத்தை தொட்டது.

தங்கம் விலை - ஏற்றமும் இறக்கமும்
அடுத்த நாளான பிப்ரவரி 1 ஆம் தேதி ரூ.62 ஆயிரத்தைக் கடந்தது. இப்படியாக நாள்தோறும் தங்கம் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டு வந்தது நகைப் பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி தங்கம் தங்கம் ஒரு சவரன் விலை ரூ.64,480 ஆகவும், பிப்ரவரி 20 ஆம் தேதி ரூ.64,560 ஆகவும் உயர்ந்தது.
அதன் பின்னர் சற்று விலை குறைந்தாலும், பிப்ரவரி 25 ஆம் தேதி மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ரூ.64,600 ஆக உயர்ந்தது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. கடந்த 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது.
ஒரு வாரமாக சரிவு
சென்னையில் கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது. 24 காரட் தங்கம் விலை ரூ.69,904-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதையடுத்து, பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ. 7940க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, கடந்த 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்துள்ளது. இதனால் இன்று தங்கம் விலை உயருமா? அல்லது தொடர்ந்து சரிவைச் சந்திக்குமா என்பது நகைப் பிரியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 3 ஆம் தேதி) தங்கம் விலையில் எந்த மாற்றமுமின்றி, ஒரு கிராம் ரூ.7,940க்கும், ஒரு சவரன் ரூ.63,520க்கும், விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை உயராதது நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கடந்த மாதம் முதல் தங்கம் விலை நிலவரம்
03.02. 2025 (இன்று) ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025 ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025 ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025 ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025 ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520
19.02.2025- ஒரு சவரன் ரூ.64,280
18.02.2025- ஒரு சவரன் ரூ.63,760
17.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
16.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
15.02.2025- ஒரு சவரன் ரூ.63,120
14.02.2025- ஒரு சவரன் ரூ.63,920
13.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
12.02.2025- ஒரு சவரன் ரூ.63,520
11.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
10.02.2025- ஒரு சவரன் ரூ.63,840
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)












Click it and Unblock the Notifications