Gold Rate today: மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை.. நேற்று குறைந்த நிலையில் இன்று ரூ.360 உயர்வு!
சென்னை: சென்னயில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூபாய் 240 சரிந்த நிலையில், இன்றுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 8,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச பொருளாதார நிலைமைக்கு ஏற்ப, தங்கம் விலை அவ்வப்போது மாறி வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது, போர் சூழல் போன்றவற்றால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கம் முதலே விர்ரென அதிகரித்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது தங்கம்.

தங்கம் விலை நிலவரம்
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ரூ.64,600 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. அதன்பிறகு அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலை சற்று குறைந்தது. கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்தது. கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.64,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.8,010-க்கு விற்பனையானது.
பிப்ரவரி 28 ஆம் தேதி 1 கிராம் தங்கம் விலை மேலும் ரூ.50 குறைந்து ரூ.7,960 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.400 குறைந்து ரூ.63,680 ஆகவும் விற்பனையானது. மார்ச் 1 ஆம் தேதி சவரனுக்கு மேலும் ரூபாய் 160 குறைந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ. 7940க்கு விற்பனை செய்யப்பட்டது.
சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை
மார்ச் 2 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையும், மார்ச் 3 ஆம் தேதி திங்கட்கிழமையும் தங்கம் விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டது. அண்மைக் காலமாக வரலாறு காணாத உச்சங்களைத் தொட்டு வந்த தங்கம் விலை, 5 நாட்களில் மட்டும் ரூ.1080 அளவுக்கு குறைந்தது.
அதைத்தொடர்ந்து, மார்ச் 4 ஆம் தேதி தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8,010க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.64,080க்கும் விற்பனை செய்யப்பட்டது. மார்ச் 5 சவரனுக்கு ரூபாய் 440 உயர்ந்தது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.55 உயர்ந்து 8,065க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (மார்ச் 11ஆம் தேதி) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 240 குறைந்து ஒரு சவரன் விலை ரூ 64,120-க்கு விற்பனையானது. அது போல் கிராமுக்கு ரூ 30 குறைந்து, ஒரு கிராம் ரூ 8,020-க்கு விற்பனையானது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1 குறைந்து ஒரு கிராம் ரூ 107-க்கு விற்பனையானது.
இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூபாய் 64,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 8,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
12.03.2025 (இன்று) ஒரு சவரன் ரூ.64,520
11.03.2025 (நேற்று)- ஒரு சவரன் ரூ.64,120
10.03.2025- ஒரு சவரன் ரூ.64,400
09.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
08.03.2025- ஒரு சவரன் ரூ.64,320
07.03.2025- ஒரு சவரன் ரூ.64,240
06.03.2025 (மதியம்)- ஒரு சவரன் ரூ.64,480
06.03.2025 (காலை)- ஒரு சவரன் ரூ.64,160
05.03.2025- ஒரு சவரன் ரூ.64,520
04.03.2025- ஒரு சவரன் ரூ.64,080
03.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
02.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
01.03.2025- ஒரு சவரன் ரூ.63,520
28.02.2025- ஒரு சவரன் ரூ.63,680
27.02.2025- ஒரு சவரன் ரூ.64,080
26.02.2025- ஒரு சவரன் ரூ.64,400
25.02.2025- ஒரு சவரன் ரூ.64,600
24.02.2025- ஒரு சவரன் ரூ.64,440
23.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
22.02.2025- ஒரு சவரன் ரூ.64,360
21.02.2025- ஒரு சவரன் ரூ.64,200
20.02.2025- ஒரு சவரன் ரூ.64,520












Click it and Unblock the Notifications