Gold rate today: அம்மாடியோவ்! என்னா வேகம்.. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை கடந்தது.. நகை பிரியர்கள் கனவில் இடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold rate) வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு உயர்ந்து புது உச்சம் தொட்டுள்ளது. குறிப்பாக நேற்று, இன்று என இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து நகைப்பிரியர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று காலையில் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து இருந்த நிலையில் மாலையிலும் ஒரு சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் இரண்டு முறை தங்கம் விலை உயர்ந்து அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்றும் இருமுறை உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ரூ.85,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price Chennai gold

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை

தங்கம் விலையை பொறுத்தவரை இதுவரை இல்லாத அளவிற்கு மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது. போகிற போக்கை பார்த்தால் இந்த ஆண்டு முடிவதற்குள் தங்கம் விலை ஒரு சவரன் 1 லட்சம் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு தங்கம் விலையானது மிகக் கடுமையாக உயர்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த சில வாரங்களாக தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு முந்தைய நாள் சாதனையை முறியடித்து வருகிறது. டொனால்டு டிரம்ப் விதித்த வர்த்தக வரி விதிப்பு, உலக அளவில் நிலவும் போர் பதற்றம், தங்கம் மீதான முதலீடு அதிகரிப்பது போன்றவற்றால் தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் விலை

இந்த ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி கிராமுக்கு ரூ.7,150 ஆகவும், பவுனுக்கு ரூ.57,200 ஆகவும் தங்கம் விற்பனை ஆனது. ஆனால் வெறும் 9 மாதங்களில் சவரனுக்கு 25 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து அதிர வைத்துள்ளது தங்கம் விலை. தற்போது திருமண சீசன், பண்டிகை நாட்கள் நெருங்கி வருவதால் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஆனால், விலை தொடர்ந்து அதிகரித்து வருவது தங்க நகை பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விலை குறையும் என காத்திருந்தால் இப்படி, ஜெட் வேகத்தில் உயர்ந்து அதிர வைத்துவிட்டதே... என நினைத்துக்கொண்டே தங்கம் வாங்குவதையும் பார்க்க முடிகிறது.

ஒரே நாளில் இரண்டு முறை உயர்வு

நேற்று மட்டும் தங்கம் விலை இரண்டு முறை உயர்ந்தது நகை பிரியர்களை அதிர வைத்தது. நேற்று தங்கம் விலை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.83,440 க்கு விற்பனையானது. கிராம் ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,360 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று காலை தங்கம் விலை மீண்டும் உயர்ந்து புதிய உச்சம் தொட்டது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 வரை உயர்ந்து ரூ.84 ஆயிரத்தை தொட்டது. அதேபோல் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 வரை உயர்ந்து ரூ.10,500க்கு விற்பனையானது.. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வரக்கூடிய சூழலில், இன்றாவது குறையும் என்று மக்கள் எதிர்பார்த்த நிலையில் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.

இன்றைய தங்கம் விலை

இந்த அதிர்ச்சி இதோடு நிற்காமல் இன்று மாலையிலும் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. காலையில் ஒரு சவரனுக்கு ரூ.560 உயர்ந்த நிலையில், மாலையில் டபுள் மடங்கு அதாவது சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85 ஆயிரத்தை கடந்தது. அதாவது ஒரு சவரன் தங்கம் விலை ரூ.85,120க்கு விற்பனை ஆகின்றது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

23.09.2025 - ஒரு சவரன் ரூ.85,120
22.09.2025 - ஒரு சவரன் ரூ.83,440
21.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
20.09.2025- ஒரு சவரன் ரூ.82,320
19.09.2025- ஒரு சவரன் ரூ.81,840
18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160
16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240
15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680
14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760
12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920
11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200
08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480
08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760
07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040
06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040
05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920
04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360
03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440
02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800
01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+