Gold rate today: விடாமல் உயர்ந்து வரும் தங்கம் விலை.. கலக்கத்தில் நகை பிரியர்கள்.. இன்றைய ரேட் எவ்வளவு?
சென்னை: தங்கம் விலை (Gold rate today) விடாமல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலை மாலை என இரு வேளைகளிலும் தங்கம் விலை உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இன்று சென்னையில் ஒரு கிராம் தங்கம் எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது, வெள்ளி விலை எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்ற தகவலை இங்கு பார்க்கலாம்.
தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே செல்கிறது. என்றாவது ஒரு நாள் விலை குறைந்துவிடும் அப்போது வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கும் நகைபிரியர்களின் கனவும் பொய்யாகவே மாறி வருகிறது.

10 மாதத்தில் ரூ.30 ஆயிரம் உயர்வு
அந்த அளவுக்கு தங்கம் விலையானது தினமும் புதுப்புது உச்சம் தொட்டு வருகிறது. நடப்பு 2025 ஆம் ஆண்டு தொடங்கும் போது ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.57 ஆயிரம் என்ற அளவில் இருந்தது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது, சர்வதேச அளவில் போர் பதற்றம் என்பது உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து விட்டது.
தற்போது 10வது மாதம் பிறந்துள்ள நிலையில் சவரனுக்கு 30 ஆயிரம் அதிகரித்துள்ளது. 10 மாதத்தில் தங்கம் விலை ரூ.30 ஆயிரம் என்ற அளவில் கூடுவது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். அதுவும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கம் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துகொண்டே செல்கிறது.
ஒரு சவரன் ரூ.87,600
அதுவும் ஒரே நாளில் இரண்டு முறை, காலை மாலை என தங்கம் விலை விடாமல் உயர்ந்து வருவது நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் சென்னையில் ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,950-க்கு விற்பனை செய்யப்பட்டது.
வெள்ளி விலையும் புது உச்சம்
தங்கம் விலை தான் இப்படி என்றால், வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவாக நேற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.3 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.165-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒருபுறம் தங்கம் விலையும், ஒருபுறம் வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்வது நகை பிரியர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
04.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (நேற்று)
03.10.2025 - ஒரு சவரன் ரூ.87,200 (மாலை)
03.10.2025 - ஒரு சவரன் ரூ 86,720 (காலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,600 (மாலை)
02.10.2025 - ஒரு சவரன் ரூ 87,040 (காலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,600 (மாலை)
01.10.2025 - ஒரு சவரன் ரூ.87,120 (காலை)
30.09.2025 - ஒரு சவரன் ரூ. 86,880
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications