Gold rate today: தங்கம் விலை அதிரடியாக சரிவு.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்
சென்னை: தங்கம் விலை (gold rate today) இதுவரை இல்லாத அளவாக ரூ.75,500-ஐ தாண்டி விற்பனை ஆகி வருகிறது. புது உச்சம் தொட்டுள்ள தங்கம் விலையால் நகை பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். வாரத்தின் முதல் நாளான இன்றாவது தங்கம் விலை குறைந்து ஆறுதல் அளிக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று தங்கம்விலை சற்று குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளை தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தாறுமாறாக உயர்ந்து மக்களை கதி கலங்க வைத்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் அவ்வப்போது புதிய உச்சம் தொட்டு நகை பிரியர்களுக்கு ஷாக் கொடுத்தது. குறிப்பாக இந்த மாத துவக்கத்தில் இருந்தே விலை உயர்ந்து வருகிறது.

புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
கடந்த 1- ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.73 ஆயிரம் என்று இருந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகும் விலை உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 6 ஆம் தேதி ரூ.75 ஆயிரம் என்ற நிலையையும் கடந்தது. அதற்கு அடுத்த நாளான 7 ஆம் தேதி தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 200-க்கும் விற்பனை ஆனது. இது தங்கத்தின் விலையில் புதிய உச்சமாக அமைந்தது.
அதற்கு அடுத்த நாளில் இதையும் முறியடித்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75,760 க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்தடுத்து உச்சம் தொட்ட தங்கம் விலையால் நகை வாங்குவோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், சனிக்கிழமை கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் விதமாக சவரனுக்கு ரூ. 200 விலை குறைந்தது.
இன்று தங்கம் விலை எப்படி?
சனிக்கிழமை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.25-ம், சவரனுக்கு ரூ.200-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 445-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை எப்படி இருக்கும்? இன்றாவது குறையுமா? என்ற எதிர்பார்ப்புடன் நகை பிரியர்கள் இருந்தனர். இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது.
இதனால் இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.75,000க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.75 குறைந்து ஒரு கிராம் ரூ.9,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வாரத்தின் முதல் நாளை தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்தியா மீது வரி விதிப்பதால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தால், தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்படும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
11.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,000 (இன்று)
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560 (நேற்று)
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ. 75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
31.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
30.07.2025 - ஒரு சவரன் ரூ. 73,680
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240.












Click it and Unblock the Notifications