Gold Rate Today: இன்றும் வீழ்ந்தது தங்கம் விலை.. 2 நாளில் மட்டும் ரூ.1,360 சரிவு
சென்னை: கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் தங்கம் விலை தாறுமறாக உயர்ந்த நிலையில், நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 1000 விலை குறைந்தது. இந்நிலையில், இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை தங்கத்தின் விலையை நிர்ணயிப்பதில் முக்கியக் காரணிகளாகச் செயல்படுகின்றன. தங்கம் விலை இந்த ஆண்டு ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.

தங்கம் விலை
கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை ரூ.58 ஆயிரமாக இருந்தது. பின்னர் தங்கம் விலை படிப்படியாக உயர்ந்தது. கடந்த ஏப்ரல் 22-ல் தங்கம் விலை ரூ.74,320-ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. பின்னர், இஸ்ரேல் ஈரான் இடையேயான போரால் ஜூன் 14 ஆம் தேதி ரூ.74,560 என்ற புதிய உச்சத்தை எட்டியது. தொடர்ந்து, தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
ஜூலை 23 ஆம் தேதி புதன்கிழமை சென்னையில் ஆபரணத் காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஐந்து நாட்களாக 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வந்தது. கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,160 அதிகரித்தது.
நேற்று சரிவு
இந்நிலையில், நேற்று (ஜூலை 24) தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1000 குறைந்தது. கடந்த 5 நாட்களாக ஏறி வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக சரிந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் ரூ.74,040க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 125 குறைந்து ரூ.9,255க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ வெள்ளி 1,28,000க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை என்ன?
இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரிக்குமா? குறையுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.இந்நிலையில், சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்தது. ஆபரண தங்கம் ஒரு சவரன் இன்று ரூ.73,680க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 45 குறைந்து ரூ.9,210க்கு விற்பனை ஆகிறது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை
25.07.2025 ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160












Click it and Unblock the Notifications