Gold Rate Today: புதிய உச்சத்தில் தங்கம் விலை- ரூ.280 உயர்வு-1 சவரன் ரூ.64,000-த்தை நெருங்கியது!
Gold Rate Today (தங்கம் விலை இன்று) : சென்னையில் தங்கம் விலை இன்றும் அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. 1 சவரனுக்கு ரூ.280 என தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதனால் 1 சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ. ரூ.63,840 ஆக அதிகரித்து ரூ.64,000-த்தை நெருங்கி இருக்கிறது.
சர்வதேச சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை முழம் ஏறுவதும் ஜான் சறுக்குவதுமாகவே இருந்தது. கடந்த ஆண்டு சவரன் 50 ஆயிரத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்த தங்கம் விலை, இந்த ஆண்டு 55 ஆயிரத்திலும் 60 ஆயிரத்திலும் இருந்தது.
தற்போது 60 ஆயிரத்தை தாண்டி தங்கத்தின் விலை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப் 1 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 62 ஆயிரத்தை தாண்டியது. நேற்று மார்க்கெட் விடுமுறை என்பதால் கடந்த 9ஆம் தேதி விற்பனையான விலைக்கே தங்கம் விலை விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தங்கம் விலை ஒரு கிராம் ரூ 7945-க்கும் ஒரு சவரன் ரூ.63,560 -க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த பிப். 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்.
09.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
08.02.2025- ஒரு சவரன் ரூ.63,560
07.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
06.02.2025- ஒரு சவரன் ரூ.63,440
05.02.2025- ஒரு சவரன் ரூ.63,240
04.02.2025- ஒரு சவரன் ரூ.62,480
03.02.2025- ஒரு சவரன் ரூ.61,640
02.02.2025- ஒரு சவரன் ரூ.62,320
01.02.2025- ஒரு சவரன் ரூ.62,320 (பட்ஜெட்டுக்கு பின்)
01.02.2025- ஒரு சவரன் ரூ.61,960 (பட்ஜெட்டுக்கு முன்)
இந்த நிலையில் சென்னையில் இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. 1 சவரனுக்கு ரூ. 280 வரை ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் 1 கிராம் தங்கம் ரூ.7,980 ஆகவும் 1 சவரன் தங்கம் ரூ.63,840 ஆகவும் உயர்ந்தது. தற்போதைய நிலையில் 1 சவரன் தங்கம் ரூ.64,000-த்தை நெருங்கிவிட்டது.












Click it and Unblock the Notifications