Gold Rate Today: காலையிலேயே மிக பெரிய அதிர்ச்சி.. சட்டென எகிறிய தங்கம் விலை.. என்ன இப்படி ஆகிடுச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. போர் தொடர்பாக டிரம்ப் சொன்ன சில கருத்துகளால் வளைகுடாவில் எப்போது அமைதி திரும்பும் என்பதில் தெளிவில்லாத சூழல் உருவாகியுள்ளது. இதற்கிடையே தங்கம் விலை இன்றும் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது உயர்ந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,10,800க்கு விற்பனையாகிறது.

கடந்தாண்டு தொடக்கம் முதலே பொதுமக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வந்த தங்கம் இந்தாண்டு மெல்லக் குறைந்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் தொடக்கம் முதலே தங்கம் விலை சீராகக் குறைந்து வருகிறது. இடையில் சில நாட்கள் அதிகரித்தாலும் கூட ஒட்டுமொத்தமாகத் தங்கம் விலை குறைந்தே வருகிறது.

Gold Rate Today

தங்கம் விலை

இதற்கு நடுவே மார்ச் 26ம் தேதிக்குப் பிறகு, கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை மெல்ல ஏற ஆரம்பித்தது. இந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை இரு நாட்கள் மட்டுமே குறைந்திருந்தது. இதனால் எங்குச் சரிவு முடிந்துவிட்டதோ, மீண்டும் விலை ஏற்றம் தானா என மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்கம் இதுபோல உயரப் பிரதான காரணமே ஈரான் போர் முடிவுக்கு வந்துவிடும் என்ற நம்பிக்கை தான். அமெரிக்காவின் அறிக்கைகளைப் பார்க்கும்போது டிரம்ப் போரை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார் என்றே பலரும் நம்பினர்.

டிரம்ப்

இந்தச் சூழலில் தான் நேற்று வியாழக்கிழமை அமெரிக்க மக்களிடையே டிரம்ப் உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வந்தது. போர் முடிவுக்கு வந்ததை டிரம்ப் அறிவிப்பார் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், டிரம்ப் வழக்கம் போலக் குட்டையைக் குழப்பினார். ஈரான் போரில் அமெரிக்கா வெற்றியை நெருங்கிவிட்டாலும் கூட போர் சில வாரங்கள் தொடரும் என்றே குறிப்பிட்டார். பதிலடி தந்தால் தீவிரமாகத் தாக்குவோம் என்றும் 2 முதல் 3 வாரங்கள் போர் தொடரும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

டிரம்ப் இப்படிப் பேசி முடிப்பதற்கு உள்ளாகவே தங்கம் இறங்க ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் போர் முடிவுக்கு வரவில்லை என்றால் ஹார்முஸ் பிரச்சினை தீராது. ஹார்முஸ் சிக்கல் தீரவில்லை என்றால் கச்சா எண்ணெய் விலை உயரும். கச்சா எண்ணெய் எப்போதுமே அமெரிக்க டாலரிலேயே வர்த்தகம் செய்யப்படும் நிலையில், டாலரின் மதிப்பு உயர்ந்தது. எப்போதும் டாலர் மதிப்பு உயரும் போது தங்கம் விலை சரியும்.. இப்போதும் அதுவே நடந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை

நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.1600 சரிந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,10,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ஒரே நாளில் ரூ.300 குறைந்து ரூ.13,750-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதனால் தங்கம் விலை இன்றும் சரியும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து, ரூ.1,10,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து, ரூ.13,850க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல், ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்:

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400

31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160

30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (மாலை)

30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (காலை)

29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280

28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+