Gold Rate Today: பேரதிர்ச்சி கொடுக்கும் தங்கம்.. இனிமேல் இப்படி தான்.. மீண்டும் உயர என்ன காரணம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈரான் போர் காரணமாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த சூழலில், இப்போது அது மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. தங்கம் விலையில் ஏற்பட்ட இந்த திடீர் மாற்றத்திற்கு சர்வதேச அரசியல் சூழல்களே காரணமாக இருக்கிறது. இன்றைய தினம் ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் விலை குறைந்து வந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதான் சரியான வாய்ப்பு என மக்கள் பலரும் ஆர்வமாகத் தங்கத்தை வாங்கினார்கள். ஆனால், கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Gold Price

ஈரான் போர்

அதாவது ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை டாலரில் மிக வேகமாக உயர்ந்தது. கச்சா எண்ணெய் என்பது எப்போதும் டாலரிலேயே வர்த்தகமாகும். இதனால் டாலர் மதிப்பு உயரவே தங்கம் விலை தானாகவே குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாகவே சில நாட்களாகத் தொடர்ந்து தங்கம் விலை குறைந்தது.

ஒரு கட்டத்தில் 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,000ஐ தாண்டிய சூழலில், போர் தொடங்கிய பிறகு அது தொடர்ந்து சரிந்தது. கடந்த மார்ச் மாதம் ஒரு கட்டத்தில் கிராம் தங்கம் ரூ.12,900 வரையிலும் கூடப் போனது. கடந்த சில ஆண்டுகளாகவே தங்கம் விலை தாறுமாறாக உயர்வதை மட்டுமே பார்த்து வந்த பொதுமக்கள், இந்தளவுக்கு விலை சரிவதைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

மீண்டும் உயர என்ன காரணம்

இதனால் தங்கத்தை மக்கள் ஆர்வமாக வாங்கினர். விலையேற்றம் காரணமாக டல் அடித்திருந்த தங்க விற்பனை, சரிவால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. நாடு முழுக்க உள்ள நகைக்கடைகளில் மக்கள் ஆர்வமாகத் தங்கம் வாங்கினர். இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தங்கம் விலையில் ட்விஸ்ட் ஏற்பட்டது. அதாவது போர் தொடருமா இல்லை முடிந்துவிடுமா என்பதில் தெளிவில்லாத சூழல் இருக்கிறது.

டிரம்ப் போரைத் தொடர விரும்பினாலும் கூட உள்நாட்டில் அவருக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. அமெரிக்கா தேவையில்லாமல் இந்த போரை நடத்துவதாக அமெரிக்க மக்களே அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் போரை நிறுத்த வேண்டிய சூழலுக்கு டிரம்ப் தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே போர் ஒரு மாதத்திற்கு மேலாகச் செல்லும் நிலையில், சீக்கிரமே போர் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாக டாலர் மதிப்பு உயர்வது குறைந்துள்ளது. இதனால் தான் தங்கம் விலை மீண்டும் ஏற ஆரம்பித்துவிட்டது.

தங்கம் விலை

கடந்த வெள்ளிக்கிழமை புனித வெள்ளி காரணமாகச் சர்வதேச தங்க மார்கெட் செயல்படவில்லை. நேற்றும் இன்றும் வீக் எண்ட் என்பதால் வழக்கமாகவே தங்க மார்கெட் இருக்காது.

நேற்றைய தினம் தங்கம் விலை சென்னையில் அதிரடியாக உயர்ந்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.800 அதிகரித்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. 22 காரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.100 அதிகரித்து ரூ.13,950-க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் ஞாயிறு என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.

தங்கம் விலை நிலவரம்:

05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+