Gold Rate Today: காலையில் குறைந்த தங்கம் மதியமே எகிறியது.. நகை கடையில் பொதுமக்கள் அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்த மாதம் அக்ஷய திருதியை வரவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் அன்றைய தினம் தங்கம் வாங்குவார்கள். ஆனால், அதற்கு முன்னரே தங்கம் விலை அதிகரிக்க ஆரம்பித்துவிட்டதால் மக்கள் கலக்கமடைந்தனர். இதற்கிடையே காலை குறைந்து பொதுமக்களுக்கு நிம்மதி கொடுத்த தங்கம், மாலையே மீண்டும் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

கடந்த இரு ஆண்டுகளாகவே பொதுமக்கள் தங்கம் விலை சரிவு என்பதை மிக அரிதாகவே பார்த்து இருப்பார்கள். அதிலும் குறிப்பாக அமெரிக்க அதிபராக டிரம்ப் வந்த பிறகு தங்கம் விலை தொடர்ந்து எகிறி வந்தது. யாருமே எதிர்பார்க்காத வகையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,000 வரை கூடப் போனது.

Gold Price Gold

டிரம்ப் வரி

இதற்கு டிரம்ப் இஷ்டத்திற்கு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளே முக்கிய காரணங்களாக இருந்தது. உலக நாடுகள் மீதான வரி, கிரீன்லாந்து குறித்த சர்ச்சை, நட்பு நாடுகளைப் பகைத்துக் கொள்வது, சீனா உடனான வர்த்தக போர், கொலம்பியா மீதான தாக்குதல் என லிஸ்ட் போட்டு கொண்டே போகலாம். உலகின் சக்திவாய்ந்த நாட்டின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு டிரம்ப் எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிவெடுத்தது தங்க மார்கெட்டில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தியது.

ஆரம்பித்த போர்

அப்படி பிப்ரவரி மாதம் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் மீதான தாக்குதலை டிரம்ப் ஆரம்பித்தார். ஆனால், இது தங்கம் விலை குறையக் காரணமாக அமைந்துவிட்டது. ஈரான் போர் கச்சா எண்ணெய் வர்த்தகத்தைப் பாதிப்பதால் டாலர் மதிப்பு உயர்ந்து, தங்கம் விலை சரிகிறது. கடந்த ஒரு மாதமாகவே தங்கம் விலை இதனால் குறைந்து வந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், இப்போது போர் மதில் மேல் பூனையாக இருக்கிறது. போர் முடியுமா இல்லை தொடருமா என்பதற்குத் தெளிவான பதில் இல்லை. இதன் காரணமாகவே தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் எனக் கலந்து வருகிறது.

அக்ஷய திருதியை

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க வரும் ஏப்ரல் 19ம் தேதி இந்தியாவில் அக்ஷய திருதியை நாளாகும். இந்த நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் செழிக்கும் என்பதே பொதுமக்கள் கருத்து. இதனால் அன்றைய தினம் பொதுமக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தங்கம் வாங்குவார்கள். சர்வதேச சந்தையில் உள்ள குழப்பமே இப்போது இந்தியாவிலும் எதிரொலிக்கும் சூழலில், அக்ஷய திருதியை அன்று தங்கம் விலை குறையுமா அல்லது மீண்டும் உயர ஆரம்பித்துவிடுமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.800 அதிகரித்து ரூ.1,11,600-க்கு விற்பனையானது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் விலை ரூ.100 அதிகரித்து ரூ.13,950க்கு விற்பனையானது. நேற்று ஞாயிறு என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இல்லை.

இன்றைய தங்கம் விலை

இன்றைய தினம் தங்கம் விலை காலையில் அதிரடியாக குறைந்தது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.140 குறைந்து, ரூ.13,810க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ரூ.1,10,480க்கு விற்பனையானது. வெள்ளி விலை எந்தவொரு மாற்றமும் இல்லாமல் கிராமுக்கு ரூ.255க்கு விற்பனையானது.

ஆனால் பிற்பகலில் நிலைமை மொத்தமாக மாறியது. தங்கம் விலை காலையில் ரூ.1,120 குறைந்திருந்த சூழலில், இப்போது ரூ.1440 உயர்ந்துள்ளது. ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1440 உயர்ந்து, ரூ.1,11,920க்கு விற்பனையாகிறது.. ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.13,990க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.260க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்:

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (இன்று பிற்பகல்)

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (இன்று காலை)

05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+