Gold Rate Today: உடனே நகை கடைக்கு ஓடுங்க.. இன்று அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 1.5 மாதங்களாகக் குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்துள்ளது. சர்வதேச அளவில் நடந்த சில முக்கியமான மாற்றங்களே தங்கம் விலையில் இந்த மாற்றங்கள் ஏற்படக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.1040 குறைந்துள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் போரில் பதற்றம் அதிகரித்ததாலேயே இத்தனை காலம் தங்கம் விலை சர்வதேச அளவில் குறைந்து வந்தது. இதன் காரணமாகவே இந்தியாவிலும் தங்கம் விலை குறைந்தது. ஆனால், கடந்த சில மணி நேரத்தில் நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. கிட்டத்தட்டப் போர் நிறுத்தம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Gold Price Gold

சர்வதேச மார்கெட்

போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியும் சீக்கிரம் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் தங்கம் விலை சரிவது முடிவுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு ஒரு அவுன்ஸ் ஸ்பாட் தங்கம் $4,638 ஆக இருந்தது. ஒரு வாரமாக சரிந்து வந்த தங்கம் இப்போது நிலையாக மாறியுள்ளது..

காரணம்

முதலில் போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் 5 காலக்கெடுவை விதித்திருந்தார். தொடக்கத்தில் பேச்சுவார்த்தையைத் திட்டவட்டமாக ஈரான் மறுத்தே வந்தது. தாக்குதல்கள் தொடரும் என்றே சொல்லி வந்தது. இதனால் என்ன நிலைமை எனத் தெரியாமல் குழப்பம் தொடர்ந்தது. ஆனால், நேற்றிரவு நிலைமை மாறியது. போர் நிறுத்தத்திற்கு ஓகே சொல்லும் வகையில் ஈரான் தனது முன்மொழிவை அனுப்பியது.

இதன் மூலம் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படுவதில் பாசிட்டிவ் சிக்னல் தென்படுகிறது. போர் நிறுத்தம் முடிந்து எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் ஹார்முஸ் திறக்கப்படும். அதில் கப்பல் போக்குவரத்து நார்மல் ஆகினால் கச்சா எண்ணெய் விலை குறையும். இதனால் தங்கம் விலையும் மீண்டும் உயர ஆரம்பிக்கும்.

வல்லுநர்கள் சொல்வது என்ன

இது தொடர்பாக டிடி செக்யூரிட்டிஸின் பார்ட் மேலக் கூறுகையில், "போர் நிறுத்தம் ஓகே. ஆனால், அடுத்த அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதத்தை நாம் பார்க்க வேண்டும். பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்ந்துள்ள சூழலில், இப்போது அமெரிக்கா பெடரல் வங்கி வரியைக் குறைக்காது. இது தங்கம் விலை உயர்வதைத் தடுக்கும் அல்லது மெதுவாக்கும்" என்றார்.

நாளை புதன்கிழமை ஃபெடரல் ரிசர்வ் மார்ச் கொள்கை கூட்ட அறிக்கை, வியாழக்கிழமை அமெரிக்கத் தனிநபர் நுகர்வோர் செலவு டேட்டா, வெள்ளிக்கிழமை நுகர்வோர் விலைக் குறியீடு ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதைப் பொறுத்தும் தங்கம் விலையில் கணிசமான மாற்றம் இருக்கும் என்கிறார்கள்.

விலை

நேற்றைய தினம் தங்கம் விலை காலையில் அதிரடியாகக் குறைந்த நிலையில், மாலையில் ஏறியது. 22 கேரட் ஆபரணத் தங்கம் காலையில் கிராமுக்கு ரூ.140 குறைந்த நிலையில், அது மாலையில் ரூ.180 உயர்ந்தது. இதனால் மாலை ரூ.13,990க்கு விற்பனையானது. ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.1,11,920க்கு விற்கப்பட்டது.. வெள்ளை விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து, ரூ.260க்கு விற்பனையானது..

தங்கம் விலை

இன்று தங்கம் விலை இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அதிரடியாக சரிந்தது. சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்தது.. ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.130 குறைந்து, ரூ.13,860க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.1040 குறைந்து, ரூ.1,10,880க்கு விற்பனை செய்யப்படுகிறது.. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.255க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை நிலவரம்:

07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)

06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)

05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600

03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)

02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)

01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+