Gold Rate Today: மொத்தமாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி சரிவு! காலையில் வந்த ஹேப்பி நியூஸ்
சென்னை: வளைகுடா மோதலில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தவுடனேயே தங்கம் விலை சட்டென நேற்றைய தினம் விலை எகிறியது.. இதற்கிடையே இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகச் சொன்ன ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக நேற்றிரவு திடீரென அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே தங்கம் விலை ஏற்றம் சர்வதேச சந்தையில் நின்றுவிட்டது. அது இந்தியாவிலும் எதிரொலித்த நிலையில், ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்துள்ளது.
வளைகுடாவில் சூழல் சர்வதேச அளவில் தொடர்ந்து பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் போர் முடிவுக்கு வந்துவிட்டதா டிரம்ப் அறிவித்தார். இரு வாரங்கள் தாக்குதலை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவிக்க.. ஈரானும் அதை உறுதி செய்தது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தும் ஆரம்பிக்கப்பட்டது.

சர்வதேச சந்தை
இந்த தகவல் வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இதனால் டாலர் மதிப்பும் சரியவே தங்கம் விலை உயர ஆரம்பித்தது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4800 டாலர் வரை போனது. இனிமேல் தங்கம் இப்படி தான் இருக்கும்.. ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டது என்றே மக்கள் பலரும் நினைத்தனர். ஆனால், நிலைமை மாறியது. இரவே எல்லாம் மொத்தமாக மாறியது.
என்ன நடந்தது
அதாவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேலின் ஹெர்ம்ஸ் ஆளில்லா விமானம் ஒன்று ஈரானின் லார் நகரின் மீது பறந்ததாகவும் அதை ஈரான் படைகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தகவல் வெளியானது. இதை உறுதி செய்த ஈரான், தங்களது நவீன வான் பாதுகாப்பு அமைப்பு அந்த டிரோன்களை இடை மறித்து அழித்தாக தெரிவித்தது. மேலும், இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் ஈரான் அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடனேயே கச்சா எண்ணெய் விலை சரிவது நின்ற நிலையில், தங்கம் விலையும் உயர்வது நின்றுவிட்டது. எனவே, இந்திய சந்தையிலும் இதுவே எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை
நேற்றைய தினம் சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து, ரூ.1,13,600க்கு விற்பனையானது. அதேபோல ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து, ரூ.14,200க்கு விற்கப்பட்டது.
இன்றைய தினம் சென்னையில் இன்று தங்கம் விலை சரிந்தது. ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 குறைந்து, ரூ.1,12,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.200 குறைந்து, ரூ.14,000க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து, ரூ.260க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை நிலவரம்:
09.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,000 (இன்று)
08.04.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600 (நேற்று)
07.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,880
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,920 (பிற்பகல்)
06.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,480 (காலை)
05.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (நேற்று)
04.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
03.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,800
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,10,000 (மாலை)
02.04.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600 (காலை)
01.04.2026 - ஒரு சவரன் ரூ.1,12,400 (நேற்று)
-
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாறுமாறாக சரிந்த தங்கம்.. தொடர்ந்து இன்னும் சரியுமா? விலை வீழ்ச்சிக்கு காரணம் என்ன? -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications