Gold Rate Today: பல வாரங்களுக்கு பிறகு நல்ல செய்தி.. தடாலடியாக குறை போகுது தங்கம் விலை? மக்கள் செம ஹேப்பி
சென்னை: அமெரிக்க பணவீக்க டேட்டா விரைவில் வெளியாகவுள்ளது. அதேபோல அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் வெள்ளிக்கிழமை உரையாற்றவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்க ஆரம்பித்துள்ளனர். இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறையும் நிலையில், இந்தியாவிலும் அது எதிரொலிக்கும் என தெரிகிறது.
கொரோனா சமயத்தில் தொடங்கிய தங்கம் விலை ஏற்றம் இந்தாண்டு தொடக்கம் வரை உயர்ந்து கொண்டே இருந்தது. அதிலும் குறிப்பாக டிரம்ப் பதவியேற்ற பிறகு வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உச்சம் தொட்டது. இனி தங்கம் விலை குறையவே குறையாதா என மக்கள் நினைத்து கொண்டு இருந்தபோது தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் விலை குறைந்தது.

சர்வதேச சந்தை
ஆனால், கடந்த சில வாரங்களாக யூடர்ன் போட்ட தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்தது. கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உச்சம் தொட்டது. இந்த சூழலில் தான் இப்போது தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் 0.2 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்ஸ் 4,640.40 டாலராக இருந்தது.
முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை விற்று லாபத்தை புக் செய்யததே தங்கம் விலை குறைய முக்கிய காரணம் என்று சாக்ஸோ வங்கியின் வல்லுநர் ஓலே ஹான்சன் தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலர் மீண்டும் வலுப்பெற ஆரம்பித்ததும் தங்கம் விலை சரிய முக்கிய இருக்கிறது. எப்போதும் டாலர் வலுவடையும் போது தங்கம் விலை சரியும். இப்போதும் அதுவே தான் நடந்துள்ளது.
முக்கியமான டேட்டா
மேலும், பிசிஇ எனப்படும் பணவீக்க அறிக்கை இன்று புதன்கிழமை வெளியாக உள்ளது. இதுதவிர, பெடரல் ரிசர்வ் தலைவர் கெவின் வார்ஷ் வெள்ளிக்கிழமை ஜாக்சன் ஹோல் மாநாட்டில் முதன்முறையாக உரையாற்ற உள்ளார். அமெரிக்காவின் பணவியல் கொள்கை குறித்து கெவின் வார்ஷின் நிலைப்பாடு மற்றும் பணவீக்க டேட்டா ஆகியவை முக்கியமானதாக உற்று கவனிக்கப்படுகிறது.
தற்போதைய சூழலில் செப்டம்பரில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கு 40 சதவீத வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கருதுகிறார்கள். அதேநேரம் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாமல் இருக்க 60 சதவீத வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கின்றனர். பொதுவாக அதிக வட்டி விகிதம் என்பது தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்கும். எனவே, வட்டி விகிதம் உயர்ந்தால் மட்டுமே தங்கம் விலை குறையும். நிலையாக இருந்தால் தங்கம் விலை உயரவே செய்யும்.
நேற்றைய தங்கம் விலை
கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் சற்று குறைந்தது. நேற்றைய தினம் சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.160 குறைந்து, ரூ.1,20,080-க்கும் விற்பனையானது. அதேபோல 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.15,010க்கு விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ள நிலையில், இன்றும் விலை குறைவு தொடரும் என்றே தெரிகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
19.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,15,200 (மாலை)
19.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160 (காலை)


Click it and Unblock the Notifications
